பக்கம் எண் :

102இலக்கணக் கொத்து 

சொல்லே சிறப்பு என்பது நோக்கி, மூன்று இயலாகிய இந் நூலுள் சொல்மாத்திரமே சில சொற்றனம் என்பது தோன்ற ‘இயம்பிலன்’ என்றாம். வடநூலாரும் தலைமைபற்றிய வழக்கால் அவ்வைந்தனையும் சொல் என்று வழங்குவர்.

[வி-ரை: வடமொழிவியாகரணத்துள் பெரும்பாலும் சொல்லிலக்கணமே கூறப்பட்டுள்ளது. ‘வடமொழிப் பிரயோக விவேகத்தினும் சொல்லிலக்கணம் அல்லது எழுத்திலக்கணம் கூறப்பட்டிலது’ என்பது பிரயோகவிவேக உரை.1.]

10பல்கால் பழகினும் தெரியா உளவேல்
தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும் ஆண்டினும் இலையேல்
வடமொழி வெளிபெற வழங்கும் என்க

முக்கால் பார்த்து, நல்லோர் பலருடன் பலகாலும் பயின்று, பிறர்க்கு அறிவித்தல் முதலியன எல்லாம் அடங்கப் ‘பல்கால் பழக்கம்’ என்றாம். இங்ஙனம் பழகமாட்டார் என்பது தோன்றப் ‘பழகினும்’ என்றாம். இங்ஙனம் பழகின் தெரியாதது ஒன்று இல்லை என்பது தோன்ற, ‘உளவேல்’ என்றாம்.

திருவைக் கோவைக்கும் கூட்டுக. மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம். அன்றியும் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கில் கலந்து இரந்து அருமைத் திருக்கையால் எழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள்மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோடு ஒன்றாக்குவர். அங்ஙனமும் அமையாது, இலக்கணமாவது தொல்காப்பியம் ஒன்றுமே, செய்யுளாவது திருவள்ளுவர் ஒன்றுமே, தனிச்சிறப்புடைய இவ்விரண்டும் நீங்கலான இலக்கண இலக்கியமெல்லாம் ஒன்றற்கு ஒன்று பெருமை சிறுமை இணை என்று கொள்வார் என்பது தோன்ற இம்முறை வைத்து அடையைப் பொதுவாக்கினாம். அவர் அதுமட்டோ இறையனார் அகப்பொருள் முதலான இலக்கணங்களையும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம்,