பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 13, 14141

மூவகைச்செய்யுள், நூற்செய்யுள், பாட்டுச்செய்யுள், உரைச் செய்யுள் என்பன. எழுவகைப்பட்ட செய்யுளுள் பாட்டுச் செய்யுள் அடிவரையறை உடையது என்பதும், ஏனைய உரை, நூல், வாய்மொழி, பிசி, முதுசொல், குறிப்பு என்பன அடிவரையறை இல என்பதும் கொள்க. வடமொழியில் எழுவாய்க்கு ஒருமை, இருமை, பன்மை என்ற மூவகை உருபுகள் உள. இவ்வாசிரியர் பலர் மதங்களைத் தொகுத்துக் கூறுவாரன்றி முடிந்த முடிபு கூறுவார் அல்லர்.]

இனி, முற்கூறிய பொது இலக்கணங்களுள், உரிமையாய் நிற்கும் உருபுகளும், உருபினை ஏற்ற சொல் பல பொருள்படுவனவும், ஓருருபிற்குப் பல பொருள் வருவனவுமாகிய மூவிலக்கணமும் ஒருங்கே தோன்ற வினைமுதல் முதலாகச் சிறப்புச் சூத்திரம் செய்கின்றோம். 13

வினைமுதல் தோன்றும் இடம்

26இருவகைச் செயப்படு பொருளே ஏது
தன்வசம் தெரியா நிலைதடு மாற்றம்
தொழிற்பெயர் ஏழில் தோன்றும் வினைமுதல்;
கருவி இடம்கொள் வானினும் கருதுவர்.

[வி-ரை: தேற்றத்தோடு கூடிய செயப்படுபொருள், தேற்றத்தோடு கூடாச் செயப்படுபொருள், ஏது, தன்வசம், தெரியாநிலை, தடுமாற்றம், தொழிற்பெயர் என்ற ஏழனையும் நிலைக்களனாகக்கொண்டு வினைமுதல் என்னும் கருத்தா தோன்றும் கருவி, இடம், கொள்வான் ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டு கருத்தா தோன்றும் என்று கருதுவாரும் உளராயினும், அங்ஙனம் கூறுதல் இலக்கணமன்று.

தெரிநிலைக்கருத்தா - செயப்படுபொருள், தன்வசம், ஏது என்ற பொருண்மைகளில் வரும்; ‘ஏயும்’ என்ற மிகையால் பாவத்திலும் தடுமாற்றத்திலும் வரும் தெரியாநிலைக் கருத்தாவிற்குப் பிரிவுகள் இல்லை என்னும் பிரயோகவிவேகம். (11)