| வேற்றுமையில் - நூற்பா எண். 14 | 143 |
மாடம் செய்யப்பட்டது. - இது தெரியா நிலை. தெரியா நிலையாவது வினைமுதல் என்று தெரியப்படாமல் வினைமுதலாயே நிற்பது. இது தெரியா நிலை எனவே, ஏனைய தெரிநிலை என்க. ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ - தொ. பொ. 93 - இது தடுமாற்றம். தடுமாற்றமாவது ஒரு பொருளே ஒகால் வினைமுதலாயும். ஒருகால் செயப்படுபொருளாயும் நிற்றல். ‘கொல்லாமை அறவினை எல்லாம் வரும்’ - கு. 321 ‘கோறல் பிறவினை எல்லாம் வரும்’ - கு. 321 ‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை வரும்’ - கு. 510 - இவை தொழிற்பெயர்க் கருத்தா. கண்காணும் - கருவி, குன்று குவட்டைத் தாங்கும்; தூண்போதிகையைத் தொட்டது - இவை இடம். ‘இரப்பவர் என்பெறினும் கொள்வர்’ - இது கொள்வோன். கருதுவர் எனவே இலக்கணமன்று. [வி-ரை: இச்சூத்திரச் செய்திகள் நன்னூல் 295ஆம் நூற்பா உரையுள் முனிவரால் எடுத்தாளப்பட்டுள்ளன. செயப்படு பொருள் தானே தாமே முதலிய தேற்றச் சொற்களோடு சேர்ந்து எழுவாயாகும்போது, வரும், நந்தும், தேயும் முதலான செயப்படு பொருள் குன்றியவினை கொள்ளும். தேற்றமின்றி எழுவாயாகும் போது மெழுகுதல் முதலாகிய செயப்படுபொருள் குன்றாத வினையையே கொண்டுமுடியும். இனி, பிரயோகவிவேக நூலார் 11ஆம் காரிகையுரையுள், ‘கூரைமேய்ந்தது, கன்றுவிட்டுக்கொண்டது, பசுக்கறந்தது, திண்ணைமெழுகிற்ற, சோறு அட்டது, கறி பொரித்தது’ எனக் கர்த்திருவற்பாவம் என்னும் கருமகருத்தா வரும். ‘செயப்படு பொருளைச் செய்தது போல’ - தொ. சொ. 246 என்னும் சூத்திரத்துள், சேனாவரையர் ‘அரிசிதானே அட்டது’ என உதாரணம் காட்டி அத்துணை எளிதின் அடப்படும் என்றும் கூறுவர் இனிக் குணிவிருத்திகாரர். |