பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 24155

கொள்வோனின் வகைகள்

36+கேளாது ஏற்றல் கேட்டே ஏற்றல்
ஏலாது ஏற்றல் ஈவோன் ஏற்றல்
உயர்ந்தோன் ஏற்றல் இழிந்தோன் ஏற்றல்
ஒப்போன் ஏற்றல் உணர்வுஇன்று ஏற்றல்
விருப்பாய் ஏற்றல் வெறுப்பாய் ஏற்றல்
ஆதியாப் பலவும் அறைந்தனர் கொள்வோன்.
 

[வி-ரை: இவ்வாசிரியர் கொள்வோனுக்கு வகைகள் பத்துக்கூறி, ‘ஆதி’ என்ற மிகையால் நான்கனைக் கூட்டிக் கொள்வோன் விரி பதினான்காக்கினர். வீரசோழிய நூலார் ஆர்வக்கோளி, கிடப்புக்கோளி, இரப்புக்கோளி (விருப்பாய் ஏற்றல், கேளாது ஏற்றல், கேட்டே ஏற்றல்) என்ற மூவகையே குறிப்பிட்டார் (40). பிரயோக விவேக நூலார் தம் 13ஆம் காரிகையுரையுள் கேளாது ஏற்றல், கேட்டே ஏற்றல், விருப்பாய் ஏற்றல், ஈவோன் ஏற்றல் என்ற நான்கனையே குறிப்பிட்டுள்ளார்.]

எ-டு:

ஆவிற்கு நீர் விட்டான் - கேளாது ஏற்றல்

வறியார்க்கு ஈந்தான் - கேட்டே ஏற்றல்.

மாணாக்கனுக்கு அறிவைக் கொடுத்தான் - ஏலாது ஏற்றல்.

தனக்குச் சோறு இட்டான்.

தனக்கு அரிசி கொடுத்தான்.

‘அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு’.                                         -கு. 847

-இவை ஈவோன் ஏற்றல்.

அரனுக்குக் கண் அலர் கொடுத்தான் அரி - உயர்ந்தோன்

அரிக்குச் சக்கரம் கொடுத்தான் அரன் - இழிந்தோன் ஏற்றல்.

சோழற்கு விருந்து கொடுத்தான் சேரன் - ஒப்போன் ஏற்றல்.


+ நன்னூல் 298 முனிவர் உரை