சோற்றிற்கு நெய் விட்டான். நீர்க்கு வாசம் ஊட்டினான். வாளிற்கு உறை வழங்கினான். தண்டிற்குத் தங்கம் கட்டினான். சுவர்க்குச் சித்திரம் எழுதினான். - இவை உணர்வு இன்றி ஏற்றல். மாணாக்கனுக்குக் கசையடி கொடுத்தான் ஆரியன். - விருப்பாய் ஏற்றல். கள்ளனுக்குச் கசையடி கொடுத்தான் அரசன். - வெறுப்பாய் ஏற்றல். ‘ஆதி’ என்றதனால், மருமகனுக்கு மகட் கொடுத்தான் - வழக்கு; மகனுக்கு அரசு கொடுத்தான் - உரிமை; அரசற்குத் திறை கொடுத்தான் - அச்சம்; தந்தை தாய்க்குத் திதி கொடுத்தான் - பாவனை; - எனவும் வரும். [வி-ரை: ஆ தனக்கு நீர் வேண்டும் என்று கேளாமலே, விட்ட நீரைத் தான் ஏற்றல் கேளாது ஏற்றலாம். முக்கண் மூர்த்திக்குப் பூ இட்டான் முதலியன பிரயோக விவேக எடுத்துக்காட்டுக்கள். (13) ‘தேவர்க்குப் பூ இட்டான் என்புழி, தேவர் தமக்குப் பூ வேண்டும் என்று இரந்திலாமையானும், இல்வாழ்வானுக்கு இயல்பு ஆதலானும் கிடப்புக்கோளி ஆயிற்று. செய்க்கு நீர் பாய்ச்சினான், ஆவுக்கு நீர் கொடுத்தான் என்பனவும் அது’ - வீரசோழியம் 40 உரை. |