| வேற்றுமையில் - நூற்பா எண். 30 | 163 |
[மதியிடத்து மறுவும், கையிடத்து விரலும், குன்றிடத்துக் குவடும், நெற்றியிடத்து விழியும், ஆண்டிடத்து இருதுவும், நாளிடத்து வைகறையும் பிரிக்கமுடியாத தொடர்பு கொண்டுள்ளமை காண்க.] ஊர்க்கண் இருந்தான்; தேர்க்கண் இருந்தான்; -எனக் கூட்ட இடமும், [ஊரின்கண்ணும் தேரின்கண்ணும் இருப்பவன் ஊரைவிட்டும் தேரைவிட்டும் பிரிந்து நீங்குதல் கூடுமாதலின், அவன் ஊரோடும் தேரோடும் பிரிக்கக்கூடிய தொடர்பு கொண்டுள்ளமை காண்க.] மணியின்கண் ஒளி; உயிரின்கண் உணர்வு; பாலின்கண் சுவை; பாலின்கண் நெய்; தீயின்கண் சூடு; நீரின்கண் சீதம்; -என எங்கும் பரத்தலும், [மணியிடத்து ஒளி, உயிரிடத்து உணர்வு, பாலிடத்துச் சுவை, நெய், தீயிடத்துச் சூடு, நீரிடத்துக் குளிர்ச்சி இவை அவ்வப் பொருளுள் யாண்டும் கலந்துள்ளமை காண்க.] ‘உடையான் அரசருள் ஏறு’ - கு. 381 ‘அவற்றுள், அஇஉஎ ஒக்குறில் ஐந்தே’ - ந. 64 -எனக் கூட்டிப் பிரித்தலும், ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ கு. 50 ‘ஒத்த(து) அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்’ - கு. 214 -எனப் பிரித்துக் கூட்டலும், |