பக்கம் எண் :

162இலக்கணக் கொத்து 

பிரித்துக்கூட்டல், இருவரின் முடியும் ஒருவினையின் தொழிற்பெயர் என மூவகைப்படும். இடத்தில் நிகழும் பொருள் உருவுடையதாகவும் உருவற்றதாகவும் இருக்கும்.

வீரசோழியம் இடத்தை இவ்வாறே நான்கு வகையாகப் பகுத்து உரிமையைப் புலன் ஆதாரம் என்றும், ஒற்றுமையிடத்தைச் சேர்வு ஆதாரம் என்றும், கூட்டஇடத்தை அயல் ஆதாரம் என்றும், எங்கும் பரத்தலைக் கலப்பு ஆதாரம் என்றும் கூறும் (41). உரையுள் சேர்வு ஆதாரம் அயல் ஆதாரம் இவற்றின் விளக்கத்தில் உள்ள திரிபு குறித்துணரத்தக்கது. பிரயோகவிவேகம், 13ஆம் காரிகை உரையில் இடத்தை இந்நூல் போலவே விடயம், சமவாய உபச்சிலேடம், சையோக உபச்சிலேடம், அபிவியாபகம் என்று பிரித்து விளக்கி, ஆதார ஆதேயங்கள் அருவாகவும் உருவாகவும் வருதலைக்குறிப்பிட்டு, இடமல்லாவிடத்தைக் கூட்டிப்பிரித்தல், பிரித்துக்கூட்டல் எனப் பகுப்பு, 16ஆம் காரிகை உரையில் இருவரின் முடியும் ஒரு வினையை விளக்கியுள்ளது.

எ-டு:

நிலத்தின்கண் தேர் ஓடுகின்றது;

கடற்கண் நாவாய் ஓடுகின்றது;

ஆகாயத்தின்கண் பருந்து பறந்தது;

காட்டின்கண் புலி வாழ்ந்தது;

-என உரிமையாயும்,

[தேருக்கு நிலமும், நாவாய்க்குக் கடலும், பருந்துக்கு ஆகாயமும், புலிக்குக் காடும் உரிமையாதல் காண்க.]

மதிக்கண் மறு;

கையின்கண் விரல்;

குன்றின்கண் குவடு;

நெற்றின்கண் விழி;

ஆண்டின்கண் இருது;

நாளிள்கண் வைகறை;

-என ஒற்றுமை இடமும்,