| வேற்றுமையில் - நூற்பா எண். 28 - 30 | 161 |
முருகனது வேல் - பொருள்; முருகனது குறிஞ்சி - இடம்; வெள்ளியது ஆட்சி - காலம்; சம்பந்தனது தமிழ் - இயற்றிய நூல்; சம்பந்தனது பிள்ளைத்தமிழ் - சம்பந்தன் பெயரால் இயற்றப்பட்ட நூல். - என உரிமையாய்த் தோன்றல் வகை ஐந்தும் முறையே காண்க. சாத்தனது பசு, சாத்தனதுசெறு, சாத்தனதுபொன் என வேறாய்த்தோன்றல் வந்தமை காண்க. இவை முன் ஒருவர்க்கு உடைமையாயும், பின்வேறு ஒருவர்க்கு உடைமையாயும் வருதலின் ‘நிலைமையில் உடைமை’ என்றாம். இம்மூவகை வேற்றுமை வடநூலார் நூற்றொரு பேதமாக்குவர்.* 28 குறைக்குப் புறனடை 41 | குறையை இன்னும் கூறின் பெருகும். 29 |
இடத்தின் வகைகள் 42 | உரிமை இருவகை ஓரிடம் எங்கும் எனநான்கு என்றே இயம்புவர் இடனே; காலம் திக்குஆ காயம் வெயில்இருள் நிலம்அரு உருமுதல் நிகழ்த்தப்படும்இடம்; கூட்டிப் பிரித்தல் பிரித்துக் கூட்டல் இருவரின் முடியும் ஒருவினைத் தொழிற்பெயர் எனமூ வகைப்படும் இடம்அல் லாஇடம்; இடத்தின் நிகழ்பொருள் இருவகை; அரு,உரு.
| |
[வி-ரை: உரிமை, ஒற்றுமையிடம், கூட்டஇடம், எங்கும் பரத்தல் என இடம் நான்கு வகைப்படும். இடம், காலம், திக்கு, ஆகாயம், வெயில், இருள், நிலம், அரு, உரு முதலிய நிலைக்களமாகும் இடங்களாம். இடம் அல்லா இடம் - கூட்டிப்பிரித்தல்.
* நன்னூல் 300. முனிவர் உரையுள் இந்நூற்பா உரைச் செய்தி உளது. |