என்புழி நின்ற பகுபதங்களை நீர், மாது, பண், கொம்பு, நந்து, வாய், கண், வான், இரண்டு, சொல், பொருள் எனப் பகாப்பதமாகவே பொருள் கொள்வர். இதனைத் தமிழ்நூலோர் பகுதிப் பொருள் விகுதி எனப் பெயரிட்டு வழங்குவர். [வி-ரை: ‘‘மாதர் மனைமாட்சியாள்’’ எனவும், கனங்குழை மாதர் கொல் எனவும், ‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து, எனவும், ‘வண்ண வண்டின குரல் பண்ணை போன்றனவே’ எனவும், ‘நத்தம்போல் கேடு’ எனவும், ‘சோதிவாயவும் கண்ணவும் சிவந்தன’ எனவும், நீலகம், மௌத்திகம், படகம் எனவும் இருவகை மொழியினும் சாமானிய தத்திதனில் வரும். ‘கொளத்திரிபிலவே’ (தொ. எ. 307) என்பது போல வரற்பாலது ‘திரிபிடன் இலவே’ (தொ. எ. 351) என்பதும், ‘இருபெயரோடும்’ என்பது ‘இருவயின் பெயரொடும்’ (ந. 89) என்பதும் அவ்வியயதத்திதனில் வரும்’’] (பி.வி. 44. உரை.) 14 | பகாப்பதச் சொல்படப் பகுபதம் ஆகியும் |
‘இல்லதுஎன் இல்லவள் மாண்பு ஆனால்’ - கு. 53 அப்படைக்கு ஆயிரம் பாய்மா வந்தன, ‘களிமடி மானி’ - ந 39 அவனினும் இவன் குணம்; கவி வந்தான்; இறை காக்கும்; கோஉண்மை கூறுவாள்; ஆயிரம் தச்சுச் செய்த தேர்; பத்துக் கொல்லுச் செய்த இருப்புலக்கை; மூவேந்து சொன்ன மொழி; (அரசு அமைச்சும் அது) இருவர்க்கும் நடு இவன்; பேதை தொழுதாள்; (பெதும்பை முதல் ஆறும் அது) |