பக்கம் எண் :

344இலக்கணக் கொத்து 

உடம்பொடுபுணர்த்தல் - நூற்பாவிலேயே ஒரு செய்தியை யாப்பில் அமைத்துப் பின்னோர் பின்பற்ற வாய்ப்பளித்தல்.

இலேசு - மிகைச்சொல்.

குறை - கூறாது விடுக்கப்பட்ட சொல்.

வேண்டா கூறல் - பின்வேண்டியது விளைக்கத் தேவையற்ற ஒன்றை ‘குறையை இன்னும் கூறின் பெருகும்’ (41) என்பது போலக் கூறுதல்.

‘‘ஏனை உயிரே’ ‘ஏனைப்புள்ளி’                         - தொ. சொ. 124, 129

என்ற விளிமரபுச் சூத்திரங்களும் அது.

தாற்பரியம் - நேரிய பொருளன்றிப் போந்த பொருள்.

செய்யுள்விகாரம் - வலித்தல் முதலிய ஆறும், மூவகைக்குறையும் ஆகிய ஒன்பது.

இருவகை வழக்கு - உலக வழக்கு, செய்யுள் வழக்கு.

‘இலக்கணமுடையது’                                              -ந. 267.

என்ற நூற்பாவில் கூறும் இயல்பு வழக்கும் தகுதி வழக்குமாம்.

திசை வழக்கு - ‘திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்’        -தொ. சொ. 449.

என்பது போல்வன.

மரூஉ மொழி - ‘மருவின் தொகுதி’ ‘மீஎன மரீ இய’ ‘முன்என்கிளவி’ ‘வழங்கியல் மருங்கின்’ -தொ.எ. 111, 250, 355, 483. முதலிய நூற்பாக்களால் சுட்டப்பட்டவை.

பொதுவிதி, சிறப்புவிதி, தன்மதம் - வெளிப்படை.

பிறர்மதம், ‘பண்ணைத் தோன்றிய’                            -தொ.பொ. 239

முதலிய நூற்பாக்கள் போல்வன.

வினை - மாப் பூத்தது; சார்பு - கவசமணிந்து மாக்கொணா என்பது; இனம் - மாவும் மருதும் ஓங்கின; இடம் - மாமறுத்த

‘வினைசார்பு இனம் இடம்’                                       - ந. 395

என்ற நூற்பாவைக் காண்க.