பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 43,45345

நித்தியம் - நாடோறும் செய்வது.

நைமித்திகம் - நாடோறும் செய்வதன்கண் நிகழும் குறைவு தீரச் சிறப்பகச் செய்வது.

காமியம் - ஒரு பயன் கருதி செய்வது.

முன்னம் - அகச்செய்யுள் உறுப்புப் பன்னிரண்டனுள் ஒன்றாகிய குறிப்பு.

இச்சூத்திரத்துக்குப் பின்புள்ள எழுவகைப் பொருள்கோள் ‘உயர்திணை இயற்பெயர்’ (130) என்னும் நூற்பாவினுள் கூறப்பட்ட ஏழும்.] 43

பிரிவு ஏழு

130உயர்திணை இயற்பெயர் அஃறிணை இயற்பெயர்
உயர்திணைப் பொருளில் சாதி ஒற்றுமை
அஃறிணைப் பொருளில் சாதி ஒருமை
உயர்திணைப் பொருளில் சாதிப் பன்மை
அஃறிணைப் பொருளில் சாதிப் பண்மை
ஒரு சொல் நின்றே தனித்தனி உதவுதல்
எனப்பிரிவு ஏழ் என்று இயம்புவர் புலவர்.
 

எ-டு:

இறை என்னும் உயர்திணை இயற்பெயர் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய்நின்று, வருமொழி வந்தபின்பு இறைவன் வந்தான், இறைவர் வந்தார் என நிற்கும்.

கோ, வேந்து, அரசு, அமைச்சு, கவி, பெண்டு, வேசை, உமை தையல், பேதை - [பெதும்பை முதலாயினவும் அது] இவை கோன் கோக்கள், வேந்தன் வேந்தர், அரசன் அரசர். அமைச்சன் அமைச்சர், கவிஞன் கவிஞர், பெண்டாட்டி