(வி-ரை.) பிழைத்த - தப்பிப் பிழைத்த. பிழை செய்த என்றலுமாம். வினை அமண்கையர்கள் - வினை - தீவினை. கையர் - கீழ்கள். மானம்......சிந்தையராகி - தாம் ஏவிய கேடு தமக்கே நேர்ந்ததனை உலகம் அறிந்துவிட்டமையால் மானமழிந்த. துன்பத்தால் மேற்செய்வதறியாது மயங்கிய. தானை நிலமன்னன் - சேனையின் பலமேயன்றி நீதியின் பலமில்லாது நின்றவன் என்பது குறிப்பு. மன்னன் தாளில் தனித்தனி வீழ்ந்து புலம்ப - தம் காலில் அரசன் வீழ்ந்து வணங்கவுள்ளஅடிகண்மார்களாயிருந்தும், தாம் அவன் காலில் வீழ்ந்து புலம்ப நேர்ந்தது தவமல்லாத அவர்களது வஞ்சமாகிய அவத் தன்மையாலாகியது. இது உலகவியற்கையிற் கண்டவுண்மை. சத்தினிடத்து வீழ்ந்து பணிய வறியாத பல மாக்கள் அசத்தினிடம் வீழ்ந்து புலம்ப நேர்வதனைப் பலவாற்றாலும் கண்கூடாகக் காணவல்லது அறிவுடையுலகம். தனித்தனி - பலரும் கூடிக் கருதிச் செயல் செய்யும் வலிமை யிழந்தமை குறிப்பு. மேன்மை நெறிவிட்ட - மேன்மை நெறி - அரசியல் நெறியும் வைதிக சைவ நன்னெறியுமாம். விட்ட - நீத்துவிட்ட. வெகுண்டு - தனது ஆணை செல்லமாட்டாமையின் வெகுட்சி வந்தது. இனி - முன் செய்தவை எவையும் பயன்படாமையின் அவ்வாறு ஒழியாது இனி என்றது குறிப்பு. அவ்வமண் - இனைய அமண் - என்பனவும் பாடங்கள். 120 1386. | "நங்கள் சமயத்தி னின்றே நாடிய முட்டி நிலையால் எங்க ளெதிரே றழிய யானையா லிவ்வண்ண நின்சீர் பங்கப் படுத்தவன் போகப் பரிபவந் தீரு முனக்குப் பொங்கழல் போக வதன்பின் புகையகன் றாலென" வென்றார். |
(இ-ள்.) வெளிப்படை. நமது சமயத்தினின்றே தெரிந்துகொண்ட முட்டி நிலையினால், எங்களுடைய ஏவுதல் கெடும்படி இவ்வண்ணம் யானையினால் உனது கீர்த்தியைச் சிதைத்தவன் சாகப், பொங்கும் நெருப்புப் போகவே அதன்பின் புகை அகன்றது போல, உனக்குவந்த அவமானம் தீரும்" என்றார்கள். (வி-ரை.) அழல்போக அதன்பின் புகைபோவதுபோல, அவன்போக உனக்குப் பரிபவம் தீரும் என்க. வினைபற்றி எழுந்த உவமம். அவன் - அழலுக்கும், பரிபவம் - புகைக்கும் உவமையாயின. சமணர்கள் தருக்கம் முதலிய கலைகளில் வல்லவர். தீயும் புகையும் ஒன்றினாலோன்று அறியப்படுமாறு பிரிக்க முடியாத சம்பந்தமுடைய பொருளுக்கு உவமை கூறுவது தருக்க நூல். அதுபற்றிய பழக்கத்தால் இவ்வுவமை கூறினாரென்க. உனது பரிபவமும் அவனது இருப்பும் புகையும் அழலும்போல இணை பிரியாத சம்பந்தமுடையவை என்பது. சமயத்தினின்றே - ஏகாரம் தேற்றம். பிரிநிலையுமாம். முட்டி நிலை-மந்திர சாதகம். விலங்கு - விடம் முதலியவற்றால் கேடுவராதபடி தடுக்கும் முறை. "தியான பாவகநிலை முட்டி" (திருஞான-புரா-1060) முதலியவை காண்க. எதிரேறு - எதிர் ஏவுதல். கண்ணேறு என்பது போல. பங்கப் படுத்துதல் - சிதைத்தல் - குறைவுபடுத்துதல். போக - போனால் - இறந்தால் . இவை, மூன்று முறையும் கேடடைந்த பின்னருஞ் சமணர் சொல்லிய |