பக்கம் எண் :


988திருத்தொண்டர் புராணம்

 

உவந்து கொண்டு - தாமும் மனைவியாரும் மனமுவந்த மகிழ்ச்சியால் நிறைந்து பாராட்டிக்கொண்டு.

திருவமு தாக்கலுற்றார் - திருவமுது அமைத்தலில் இருவரும் தத்தமக்கேற்ற செயல்களைக் செய்தனர் என்பது. இளையான்குடிமாறர் புராணம் ஈண்டுச் சிந்திக்கற்பாலது. திருவமுது - ஈண்டு உணவுவகை முழுதும் குறித்து நின்றது. மேல்வரும் பாட்டுப் பார்க்க.

உய்தும் - உய்ந்திடுவோம், உய்வோமாக. மேற்சரித விளைவும் குறிப்பு.

22

1805.

தூயநற் கறிக ளான வறுவகைச் சுவையா லாக்கி
யாயவின் னமுது மாக்கி, யமுதுசெய் தருளத் தங்கள்
சேயவர் தம்மின் மூத்த திரநாவுக் கரசை "வாழை
மேயபொற் குருத்துக்கொண்டு வா"வென விரைந்துவிட்டார்.

23

(இ-ள்.) தூய....ஆக்கி - தூய்மையுள்ள நல்ல கறி வகைகளை ஆறு சுவைகளும் பொருந்தும்படி சமைத்து; ஆய இன் அமுதும் ஆக்கி - ஆகிய இனிய திருவமுதினையும் சமைத்து; அமுது செய்தருள - அமுது செய்தருளுதற்குரிய பரிகலத்துக்காக; தங்கள்...திருநாவுக்கரசை - தம் மக்களுக்குள்ளே மூத்த திருநாவுக்கரசினை நோக்கி; "வாழை....வா" வென - வாழையின் நல்லதொரு குருத்தை அரிந்துகொண்டு வா என்று சொல்லி; விரைந்து விட்டார் - விரைவுபடுத்தி ஏவிவிடுத்தனர்.

(வி-ரை.) தூயநற் கறிகள் ஆன - தூயகறிகளாவன தூய நிலத்தில் விளைந்தவை; தூய்மையற்ற எரு - நீர் முதலியவற்றால் விளைக்கப்படாதவை; அசுத்தமாகிய கொள் கலங்களிற் சேர்க்கப்படாதவை என்றிவ்வாறு சார்வன. நற்கறிகளாவன தாமத முதலிய குணபேதங்களை விளைக்காதவை, வாத பித்த அப் பகுதிகளுக்கு ஒவ்வாது நோய் செய்யாதவை, இலகுவில் சீரணிக்கத்தக்வை, என்றிவ்வாறு உடற் சுகத்துக்கும் அறிவு விளக்கத்துக்கும் ஏதுவாயின கறிகள். ஆன - அத்தகையன பலவற்றுள்ளும் அந்த இடத்துக்கும் காலத்துக்கும் உண்பவர்க்கும் பொருத்தம் ஆயினவை.

அறுவகைச் சுவை - இனிப்பு - கார்ப்பு - புளி்ப்பு - உவர்ப்பு - துவர்ப்பு - கைப்பு என்பது. "உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினில்" (443).

ஆய இன் அமுது - ஆய - உணவினுள் முதலாகிய. இன் அமுது - செந்நெல் அரிசியினாலாயது. அமுது - பசியாற் சாவாமற் காப்பது. தேவரமுதும் இக்காரணத்தால் அப்பெயர் பெற்றது. இதுபற்றித் தேவாமிர்தம் போல்வதென உபசரித்துக் கூறப்படும். தேவாமிர்தத்துக்கும் அப்பெயர் உபசாரமேயாகும். சிவன் ஒருவரே அமுதமாவார்; என்றும் அழியாத அமுதமாவார். சுடுகை மாறாது புதிதாய் இருத்தற் பொருட்டு கறிகளை முன்னரும் அமுதினைப் பின்னரும் சமைத்துவைக்கும் முறை குறிக்கக் கறிகளின்பின் அமுதமாக்கி என்று வைத்தோதினார். பரிகலத்திற் படைக்கு முறையும் காண்க.

அமுது செய்தருள - திருநாவுக்கரசு நாயனார்அமுது செய்தற்குரிய பரிகலமாக.

சேயவர் - ஆண்மக்கள். மூத்த திருநாவுக்கரசு - மக்களுள் மூத்தவர்.

வாழை மேய பொற் குருத்து. "குருநாளக்குருத்து" (1469) என்றவிடத்துக் குருத்தின் பெருமையும், நீளமும், முற்றியும் மிக முற்றாமலும் இருக்கும் நிலையும் கூறப்பட்டன. ஆதலின் இங்கு அதன் அழகும் பொன்னிறமும் மட்டும் குறிக்கப்பட்டன. முதல் வாழையின் குருத்தே இத்தகைய தன்மைகளுட னிருக்கும். ஆயின் முதல் வாழையின் இலையை அரியின் பலன் குறையுமென்று உலகர்