பக்கம் எண் :


1008திருத்தொண்டர் புராணம்

 

1822. (இ-ள்.) திருந்திய...அளித்திட - திருத்தமாகிய மணமுடைய நல்ல நீரைக் கொடுக்க; திருக்கை....என்ன - திருக்கரத்தைக் கழுவும் பெருந்தவராகிய திருநாவுக்கரசு நாயனார், அப்பூதியடிகளாரைப் பிள்ளைகளுடனே நோக்கி, "அருமையாகிய புதல்வர்களும் நீரும் இங்கு மருங்கிருந்து அமுது செய்வீராக" என்று சொல்ல, விரும்பிய....செய்வார் - விருப்பமுடைய உள்ளத்துடனே மேலவராகிய அவர் ஏவியபடி செய்வாராய்,

40

1823. (இ-ள்.) மைந்தரும்...செய்ய - மைந்தர்களும் மறையவராகிய; அப்பூதியாரும் பக்கத்திலிருந்து அமுது செய்ய; சிந்தைமிக்கு......நல்க - மனமிக மகிழ்ச்சியுடன் மனைவியார் திருவமுது எடுத்துப்படைக்க; கொந்து அவிழ்.....அருளினார் - கொத்தாய் மலர்கின்ற கொன்றை மலரைஅணிந்த சடையினையுடைய அருட்பெருங் கூத்தனாராகிய சிவபிரானின் அடியார்களோடும் அழகிய தமிழ்ச் சிங்கம் போன்ற திருநாவுக்கரசு நாயனார் அங்குத் திருவமுது செய்தருளினார்.

41

இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.

1820. (வி-ரை.) ஆங்கு - அவ்வாறாக. முன் பாட்டிற் கூறிய அக்கருத்தால் விளைந்த.

வாட்டந் தன்னை அறிந்து -மகிழாது சிந்தை நொந்தாராதலின், அந்த அகத்தின் குறி முகத்தில் தோன்றவே, அதனாலும் பிறவாற்றாலும் வாட்டம் அறியக்கிடந்தது, முன் "இப்போது இங்கவ னுதவான்" என்ற உரையினைக் கேட்டவுடன் திருவருளால் நிகழ்ச்சிகளை அறிந்த அரசுகள், இங்கு, அவர்களது வாட்டத்தினையும் அதன் காரணத்தையும் அறிதல் அரிதன்று.

கூட - அப்பூதியார் - மனைவியார் - புதல்வர் - முதலிய சுற்றமும், தொண்டர்களும் ஆகிய இவர்களுடன் கூட.

ஓங்கிய மனை - இந்நிகழ்ச்சி காரணமாகக் குருவருளால் முன்னையினும் பெருமை விளங்கிய திருமனை. "அந்தமின் மனை" (458) என்றதும் ஆண்டுரைத் தவையும் பார்க்க.

அமுது செய்தருள உற்ற பாங்கினில் இருப்ப - "அமுது செய்தெங் குடிமுழுதுய்யக்கொள்வீர்" (1812) என்று முன்னர் அப்பூதியார் விண்ணப்பிக்க எழுந்து போந்து அமுது செய்ய வேறோர் ஆசனத்தேறியருளிய அரசுகள், அவ்விண்ணப்பத்தின் தொடர்பாய் மேலும் வேண்டுதல் இல்லாது தாமே சென்று அமுது செய்யும் பாங்கினி லமர்ந்தருளினர். பாங்கு - பண்பு.

தருவன - பெரியவரை அமுது செய்வித்தற்குச் செய்யத்தக்க செயல்களுக்குரிய பண்டங்களும் பிறவும்.

சமைத்தல் - ஈண்டுக் கொணர்ந்து முறைப்பட அமைத்தல் என்ற பொருளில் வந்தது.

சார்வார் - அரசுகளைச் சிவனாகச் சார்வாராகி என்றதும் குறிப்பு.

அரசர் - இருப்ப -மார்பர் தாமும் - சார்பவாராகிய (1820); நீவி - போக்கி ஏற்றி - விரித்து - விளக்கி -மரபின் வைத்தாராய் (1821); அமுது செய்ய- நல்க - அடியாரோடும் - தமிழாளியார் - அமுது செய்தருளினார் (1823) என்று இந்நான்கு பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க. வைத்தார் (1821) என்றதனை வினைமுற்றாகவைத்து முடிபு கொள்ளினும் இழுக்கில்லை.

தருவன அமைத்து - என்பதும் பாடம்.

38