(வி-ரை.) மேல் தோன்றல் - தோன்றலாயினவர்களுள் மேலாயினவர். தோன்றல் - சிறப்புடையவர். மேல் - என்றும், தோன்றல் என்றும், பெருந்தன்மையினார் - என்றும் பல வகையாற் கூறியது அவரது மிகச் சிறந்த பெற்றி காட்டுதற்கு. மனைஅறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மை - புரிந்து - மனையறத்துக்குரிய கடப்பாடுகள் பல ; "தென்புலத்தார்", "துறந்தார்க்கும்" என்பனவாதித் திருக்குறள்களால் அவை பேசப்படும்; அவை எல்லாஞ் செய்தொழுகுவார் என்பதாம். புரிந்து - என்றதனால் வழுவற நினைந்து செய்து என்ற குறிப்பும் பெறப்படும். அறம் புரந்து - என்பது பாடமாயின் வழவாமற் காத்து என்க. "ஒப்பின் மனையறம் புரப்பீர்" (சிறுத். புரா. 40) என்றது காண்க. விருந்தளிக்கும் மேன்மை - மனையறம் புரிந்து என்றதனால் விருந்தளித்தலும் கொள்ளப்படுமாயினும், இல்லறத்தின் கடமைகளுள் விருந்தளித்தல் மிகச் சிறந்ததும் இன்றியமையாததுமாகும் என்று எடுத்துக் காட்டப், புகழனார் இதிற் றலை சிறந்து விளங்கினமை கூறும் முகத்தால் இதனை வேறு பிரித்துக் கூறினார். ஒக்கல் வளர் பெருஞ்சிறப்பு - ஒக்கல் - சுற்றத்தார். தம்மோடு ஒத்த குலமும் மரபும் பண்பும் உடைமையால் இப்பெயர் பெற்றனர் என்ப. தாமே வந்து சுற்றிச் குழு மியல்பு வேண்டப்படுதல் பற்றி இவர் சுற்றம் எனப்படுவர் என்று குறிக்க வளர் என்ற அடைமொழி தந்து ஒதினார். "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல்" என்றது திருக்குறள். "சுற்றததிற் கழகு சூழ விருத்தல்" - (ஒளவை) விருந்தளிக்கும் மேன்மை - ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பு. விருந்து - தொடர்பு பற்றாது புதிதாய் வருவோர்; விருந்து வேறு; ஒக்கல் வேறு; இவ்விருதிறத்தினரும் உலக வழக்கில் மயங்கிப் பேசப்படுவதும், விருந்தினரினும் பெரியராய்ச் சுற்றம் போற்றப்படுதலும் தவறு. இவருட் சிறப்புடையாராகிய விருந்தினர் மேம்பாடாக முன்னர்ப் போற்றப்படத்தக்கார் என்பது குறிக்க அவரை முன்வைத் தோதியது மன்றி, அளிக்கும் மேன்மை எனவும் கூறிய வைப்பு எடுத்துக் கூறினார். திருக்குறளினுள்ளம் "விருந்து ஒக்கல்" என்று கூறிய வைப்பு முறையும் காண்க. வளர்பெருஞ் சிறப்பு - வளர் - என்பது மேன்மேலும் சூழும் இயல்பும், செல்வரால் வளர்த்துப் போற்றப்படும் தன்மையும் குறித்தது. வளர் - செயப்பாட்டு வினைப்பொருளும் குறிப்பினாற் றந்துநின்றது. திக்கு நிலவும் பெருமை திகழவரும் - விருந்தளித்ததனாலும் ஒக்கல் வளர்பெருஞ் சிறப்பினாலுமேய்னறி, உலகுக்கு வழிகாட்டியருளத் திலகவதியம்மையாரையும் மருணீக்கியாரையும் பெறநின்ற சிறப்பினாலும் என்று உணர்த்துவார் திகழவரும் என்றார். அச்சிறப்பே எல்லாத் திக்கிலும் விளங்க வர நின்ற பெருமையாவதும் உணர்க. உளரானார் - உளரானார் - சொற்பின் வருநிலையணி. தன்மையினார் - மேன்மையினார் ஆகிய புகழனார் உளரானார்; அவரே உளர் ஆனார் என்று கூட்டி முடித்துக் கொள்க. "என்னுடைய ரேனு மிலர்" என்றபடி இவ்வாறாகிய பெருமை கிடைக்கப் பெறாத ஏனையோர் இலரேயாவர் என்பது. புகழனார் - இயற்பெயர். தோன்றிற் புகழொடு தோன்றுக என்றபடி, திக்கு நிலவும் பெருமை திகழவருதலின் இப்பெயர் இடுகுறியளவா யொழியாது, உண்மையிற் காரணப்பெயராயும் நின்றது. இரட்டுறமொழிதலால் புகழ் - அனார் - புகழே உருவெடுத்தாற் போல்பவர் என்றுரைக்கவும் நின்றது. 16 1282. | புகழனார் தமக்குரிமைப் பொருவில்குலக் குடியின்கண் மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணிவாயிற்றில் |
|