பக்கம் எண் :


344திருத்தொண்டர் புராணம்

 

தவம் அன்பு என்னும் அட்டபுட்பங் கொண்டு அருச்சித்தலாம். தியானித்தலாவது விந்துத்தானமாகிய புருநவிலே ஒளிவடிவாகத் தியானஞ் செய்தல். ஒமித்தலும் தியானித்தலும் பூசைக்கங்கமாம். இவைபற்றிச் சிவஞானபோதம் 9-வது சூத்திரம் "அஞ்செழுத்தால்" என்ற உதாரண வெண்பாவின் கீழ் எமது மாதவச் சிவஞானமுனிவருரைத்தவவை காண்க. சாமி - சரசுவதி - கோமி - எழுபெருந் தீர்த்தங்களுள் வைத்தெண்ணப்படுவர். -(9) சிரமம் - வருந்திச செயயும் இயம நியம முதலியன.

தலவிசேடம் :- குடமூக்கு - இது கும்பகோணம் எனப் பெருவழக்கில் அறியப்படுவது. ஒரு பேரூழி நீர்ப்பெருக்கில் எல்லா உயிர்களையும் சேரக்கொண்டு வைத்த குடத்தின் மூக்கு இருந்த இடம் என்ற காரணத்தால் இப்பெயர் போந்தது. தம்முள் மூழ்கினோரது எல்லாப் பாவங்களையும் போக்கும் கங்கையே முதலிய ஏழுபெருந் தீர்த்தமாதாக்களும் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு வந்து ஆடும் மகாமகத் தீர்த்தம் பொருந்திய பெருஞ் சிறப்புடையது இத்திருத் தலம். "பூமருவு கங்கை முதற் புனிதமாம் பெருந் தீர்ததம், மாமகந்தா னாடுதற்கு வந்துவழி படுங்கோயில்" (திருஞான - புரா - 409) என்று குடந்தைக் காரோணத்தைப் பற்றிக் கூறுதல் காண்க. "நாற்றிசையோர் பரவு திருக் குடமூக்கு" (மேற்படி - 405) என்றது காண்க. விட்டுணு பூசித்துச் சார்ங்கமும் சக்கரமும் பெற்றனர். ஏம இருடி முதலியோர் பூசித்தனர். சுவாமி அழகிய மிருத்துலிங்கத் திருமேனியோடு விளங்குகின்றார். சுவாமி - கும்பேசர். அம்மை - மங்களநாயகி. தீர்த்தம் - மகாமக தீர்த்தம். பதிகம் 2.

இது கும்பகோணம் என்ற இருப்புப்பாதை நிலயத்தினின்று மேற்கே கற்சாலை வழி ஒரு நாழிகை யளவில் அடையத்தக்கது.

திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடனஞ்ச முண்டிருண்ட கண்ட போலு
மன்டலிந்த மணிவரைத்திண் டோளர் போலு
மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

1

ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவியம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியோடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்த்தெங் கூத்த னாரே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- குடந்தைக் கீழ்க்கோட்டத்து எழுந்தருளி விளங்கும் கூத்தனார் சொன்மலிந்த மறைநான் காறங்க மாகிச் சொற்பொருளுங் கடந்த சுடர்ச்