பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்417

 

பதிகக் குறிப்பு :- கடவூர் இறைவர் தம்மை அடைந்த மார்க்கண்டேய முனிவர் பொருட்டுக் கூற்றைத் திருவடியால் உதைத்துருட்டினார். அவர் உத்தமர்; அருளுடையார்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- "கடவூருறை உத்தமனே" என்பது இப்பதிகத்து மகுடம். -(1) மருள் துயர் - மரணத்துன்பம். மாணி - பிரமசாரி. இருள் மேனி - வளைவாள் எயிறு - எரிக் குஞ்சி - சுருட்டிய நா - இவை கூற்றுவானின் உருவக் கூறுகள். உங்ஙனே உதைத்து உருட்டிய - அச்செயலின் எளிமை தோன்றக் கூறியது. உங்ஙனே - உகரச்சுட்டுச் சேய்மையும் ஆகாது அணிமையும் ஆகாது இடைப்பட்ட நிலை குறிப்பது. உருட்டிய - உத்தமன் - உருட்டிய செயல் அவரது அருட்பெருங் குணங் குறித்தது. மார்க்கண்டன் அருள் பெற்றதுமன்றிக் கூற்றுவானும் வரம்பெற்றுய்ந்தமையுங் குறிப்பு. தலவரலாறு காண்க. "கால னறிந்தா னறிதற் கரியான் கழலடியே" (திருவிருத்தம் - பொது.) - (2) பதத்தெழு மந்திரம் - வேதம் ஓதும்முறை. அஞ்செழுத்து - வேதத்தினுட் பொருளாதல் குறிப்பு. "வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது" '(பிள்ளையார் தேவா). கதம் - கோபம்.-(3) கரப்பு - வஞ்சனை. உரப்பிய - அச்சுறுத்திய. அழித்த என்றலுமாம். -(4) மறி - மான் கன்று. உறுக்குதல் - அழித்தல். -(5) உழக்குதல் - நிலை தளர்வித்தல். -(6) பாலன் - உபமன்னியு முனிவர். ஆரணம் - ஆகமம் வேதம். முனி - மாாக்கண்டர். அருமுனிக்காய் - முனிவனைக் கொல்ல. நான்கனுருபு பகைப்பொருளில் வந்தது. -(7) பன்னகம் - பாம்பு. பாம்பைக் கயிறாகக்கொண்டு அதில் உடைதலைகளை மாலைபோலக் கோத்து. உடறுதல் - அழித்தல். கரோடி - முடிமாலை.-(9) ஊழிஅம் ஆய - ஊழிக் காலத்திலும் அழியாது நின்ற.

III திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை, நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே,
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலால், கலைக்கை யானைகண்டீர்கடவூரரே.
அடுத்து வந்து விலங்கையர் மன்னனை, எடுத்த தோள்க ளிறநெரித் தானையார்;
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்; கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- மலையில் வாழும் யானை போன்றுவரும் வலிய வினைகளின் பாற்படடு உழலும் நெஞ்சமே; ஆணவமாகிய மதயானை உன்னைக் கொல்லும்; கடவூரராகிய ஆனையார் உன் உள் புகுந்து அந்த மதயானையினின்றும் உன்னைக் காத்து இன்பஞ் செய்வர். குறிப்பு :- பதிக முழுதும் கடவூரரை ஆனையார் - ஆனைபோல்பவர் - என்று உருவகித்தார். அனையார் - ஆனை - பசுவை - மேல்கொள்பவர் - பசுபதி என்ற குறிப்பும் படநிற்பது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மலைக்கொளானை மயக்கிய வல்வினை - மலையில் வாழும் - யானையினும் கொடிய வலிய வினை. வல்வினை நிலைக்கொளானை நினைப்புறும் - வினைகளுக்கே நிலைக்களமாகிய நினைப்புக்களைப் பொருந்திய, கொலைக்கை யானையும் கொன்றிடும் - வல்வினைகளாகிய யானையும், ஏனை மதயானையும். முன் சொன்ன வல்வினையே யன்றி என உம்மை இறந்தது தழுவியது. இங்குக் கடவூரிறைவர் நாயனாருக்கு யானையாகித் தோன்றுவதோர் உள்ளக்குறிப்புத் தோற்றுவித்தருளினர் என்பது.-(3) வேனல் ஆனை - சினமுடைய யானையை.-(4) நீலமேனி நெடும்பளிங்கு - ஒருபால் அம்மையாரும் திருமாலுமாகிய நீலமேனியும், ஒருபால் தமது வடிவமாகிய பளிங்கு மேனியும் கொண்ட. -(5) எளித்த - எளிதாகக் கருதிவந்த.-(7) எண்ணுளார் - ஞானிகள். -(10) மாண்ட - தமது செருக்கு அழிந்த. -(11) கடுக்கை - கொன்றை.