என்றுரைப்பாருமுண்டு. அஃதுரையன்மை காண்க. "வேயிடங்கொண்ட புனிதர்" (திருஞான - புரா - 1012.) உலகுய்ய இருப்பார் - தமது எங்கும் நிறைந்த அகண்ட உருவை உலகம் கண்டு வழிபட்டுய்ய இயாதாதலின் உலகம் கண்டு தொழுது உய்யும்பொருட்டு கண்டித உருவத்தில் சிவக்குறியினிடமாக வெளிப்பட்டு நிலையாக விளங்க வீற்றிருப்பார். புரமூன்றும்.....சிலையார் - "முந்தி மூவெயி லெய்த முதல்வனார்" என்ற திருக்குறுந்தொகைப்பதிகத் தொடக்கக்குறிப்பு. எடுத்த - சிலையார் - சிலையினை எடுதததேயன்றிக் கணை தொட்டாரலர்; ஆனால் புரங்கள் வெந்தன என்பது குறிப்பு. போற்றுவார் - எடுத்துப் பாடி - என மேல்வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க. போற்றுவார் - எதிர்காலவினைப் பெயர். 339 1605.(வி-ரை.) "முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து - இது பதிகத் தொடக்கம். இதன் விளக்கம் பதிகப்பாட்டுக் குறிப்பிற்பார்க்க. சிந்தை கரைந்து உருகு - பொருளழுத்தம் சிந்திக்கச் சிந்திக்க மனத்தை உருகச் செய்வதாம் என்பது. "ஓங்குதிருக் குறுந்தொகை" (1602) என்றது காண்க. சந்தநிறை நேரிசை - "களங்கொள் திருநேரிசை" (1602) என்றபடி கழுத்தையிடமாகக் கொண்டு பிறக்கும் ஒலியால் பாடப்படுவதாதலின் சந்தநிறை என்றார். சந்தம் - இங்கு இசைக் கூறுபாட்டின் அளவு குறித்தது. நாயனார் இத்தலத்துப் பாடி அருளிய திருநேரிசைப்பதிகம் கிடைத்திலது! முதலான தமிழ் - என்றதனாலறியப்படுகின்றபடி நாயனார் அருளியிருக்கக்கூடிய ஏனைய திருப்பதிகங்களும் கிடைத்தில! ஆசிரியர் காலத்தில் திருநேரிசைப் பாட்டுக்கள் சிலவேனும் வழக்கில் இருந்தன போலும். ஏகுவார் - எதிர்கால முற்றெச்சம். ஏகுவாராகி - அகன்று என மேல்வரும் பாட்டின் வினையெச்சத்துடன் கூட்டி முடிவுகொள்க. வாகீசர் - திருப்பாசூரை வழிவட்ட வரலாற்றுப்பகுதி (1603 - 1606) குறிக்க வைத்த எழுவாய். இவ்வாறே முன் திருவொற்றியூரினை வழிபட்ட வரலாற்றுப் பகுதி (1598 - 1602)யைத் "திருநாவுக்கரசர்" (1599) என்ற ஓர் எழுவாய் வைத்தோதிக் குறிப்பிட்டதும், பின் ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் "வாழ்க வந்தணர்" என்ற திருப்பாசுரத்தின் விரிவுரை அருளிய பகுதியில் ஒவ்வொரு பாசுரவுரை முடிவு காட்ட ஒவ்வோர் எழுவாய் வைத்தோதிய மரபும், பிறவும் ஆசிரியரது தெய்வக்கவி நலங்களாகக் கண்டுகொள்க. 340 திருப்பாசூர் I திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| முந்தி மூவெயி லெய்த முதல்வனார், சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார், அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர், பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே. 1 வெற்றி யூருறை வேதிய ராவர்நல், லொற்றி யேறுகந் தேறு மொருவனார், நெற்றி கண்ணினர் நீளர வந்ததனைப், பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே. |
4 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என்றிவ்வாறு பல வகையாலும் அறியப்படுகின்ற பாசூரடிகள் சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்; அந்திக்கோன் றனக்கேயருள் செய்தவர்; நீளர வந்தனைப் பற்றியாட்டுவார். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முந்தி - தேவர்கள் முறையிட்ட ஒலியின் எதிர் ஒலி அடங்குமுன், "மணியைக் கையால் நாவா யசைத்த வொலியொலி மாறிய |