திருப்பருப்பதம் திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| கன்றினார் புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறி நின்றதோ ருருவந் தன்னா னீர்மையு நிறையுங் கொண்டு ஒன்றியாங் குமையுந் தாமு மூர்பலி தேர்ந்து பின்னும் பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே. 1 அடல்விடை யூர்தி யாகி யரக்கன்றோளடர வூன்றிக் கடலிடை நஞ்ச முண்ட கறையணி கண்ட னார்தாஞ் சுடர்விடு மேனி தன்மேற ண்ணவெண் ணீறு பூசிப் படர்சடை மதியஞ் சேர்த்திருப் பருப்பத நோக்கி னாரே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு:- புரங்கள் மூன்றும் எரியாகச் சீறியும், உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்தும், பன்றிப்பின் வேடராயும், பற்றினார்க் கருள்கள் செய்தும் இவ்வாறு பலவும் அருளும் இறைவனார், பாரிடம் பாணிசெய்ய, அடல்விடையூர்தியாகிப் பருப்பதம் நோக்கினார். பதிகப் பாட்டுக்குறிப்பு :- (1) கன்றினார் - பகைத்தவர். நின்றதோர் உருவம் - பிட்சாடன உருவம். நீர்மையும் நிறையும்கொண்டு - தாருகாவனத்து இருடிகளின் நீர்மையினையும், அவர்தம் மனைவியர்களது நிறையினையும் அழித்து. -(2) பற்றினார் - பிற பற்றுக்களையெல்லாம் விட்டுத் தம்மையே பற்றினவர். "மற்றுப் பற்றெனக்கின்றி" (தேவா). "பற்றுக பற்றற்றான் பற்றினை" (குறள்). -(3) கரவு - வஞ்சம். "கரவாடும் வனனெஞ்சர்க் கரியானை" (தேவா). வேட்கை விட்டிட்டார் என்க. "வென்றவைம் புலனான் மிக்கீர்" (401). -(6) ஓடர் - தலை ஓட்டினை ஏந்தியவராய். பாடர் - பாடுபவர் - பாட்டினை உடையவர். -(7) இமையவர் பரவியேத்த - பலவகைத் தேவச்சாதியார்களும் இங்கு வந்து வழிபடுதல் கருத்து. (1614). -(8) காருடை - கார் - கருநிறமுடைய விடம். ஆகுபெயர். பாரிடம் பாணி செய்ய - பாரிடம் - பூதகணம். பாணி செய்ய - கைகளால் தாளம் போட. -(9) மாலுடையர் - மயக்கம் -செய்பவர். ஐவர் - ஐம்பொறி. பைங்கண் வெள் ஏறு அது ஏறி - நந்திதேவர் தவங் கிடந்து இறைவரைத் தாங்கும் இம் மலையுருவமாயினமை குறிப்பு. -(10) அடல்விடை யூர்தி யாகி என்ற கருத்துமிது. தலவிசேடம் :- திருப்பருப்பதம் - இது வடமொழியில் ஸ்ரீசைலம், ஸ்ரீபர்வதம், மல்லிகார்ச்சுனம் என்று வழங்கப்படும். (அர்ச்சுனம் - மருது.) மருது மூன்றனுள் முதல் மருது இத்தலமாம். இடைமருது (சோழ நாடு), புடைமருது (பாண்டி நாடு) என்பவை ஏனை யிரண்டாம். சிலாதர் என்ற முனிவர் தவஞ் செய்த காரணத்தால் இது சைலம் என வழங்குவ தென்றும், சிலாதருடைய திருமகனார் திருநந்திதேவர் தவஞ் செய்து இறைவரைத் தாங்குவதற்கு இம் மலையுருவா யுள்ளாராதலின் இப்பெயர் பெற்ற தென்றும் கூறுப. "பருப்பதப் பெயர்ச் சிவாதனற் பாலகன் பரம, னிருப்ப வோர்வரை யாவனென் றருந்தவ மியற்றிப், பொருப்ப தாகியே யீசனை முடியின்மேற் புனைந்த, திருப்பருப்பதத் தற்புத மியாவையுந் தெரிந்தான்" (வழிநடை - 5) என்றது கந்த புராணம். இதன் அளவிறந்த பெருமைகளைச சிவ ரகசியப் பேரிதிகாசம் எடுத்துப் பேசும். இங்கு எழுந்தருளிய இறைவரது திருமேனி பன்னிரண்டு சோதிலிங்கங்களுள் ஒன்று. சத்தி பீடங்கள் பதினெட்டனுள் ஒன்றாகிய பிரமராம்பாள் பீடம் இங்கு உள்ள அம்மை சந்நிதி யென்பர். சந்திராவதி என்ற அரசி இறைவரை மல்லிகை |