பக்கம் எண் :


672திருத்தொண்டர் புராணம்

 

வேந்தரிருந் தமைகேட்டு "விரைந்தவர்பாற் செல்வ"னெனப்
பூந்துருத்தி வளம்பதியின் புறம்பணையில் வந்தணைந்தார்.

392

1656. (இ-ள்.) பொன்னி........இருப்ப - காவிரியாறு வலமாகச் சூழ்ந்துசெல்லும் திருப்பூந்துருத்தியில் வாகீச முனிவர் இவ்வாறு எழுந்தருளி யிருந்தாராக; கன்மனத்து.....கட்டழித்து - கல்போன்ற கடிய மனத்தினையுடைய வலிய அமணர்களை வாதில் வென்று அவர்களது பொய்க் கட்டுக்களைக் குலைத்து; தென்னவன்........அருளி - பாண்டியனது கூனை நிமிரச்செய்து அவனுக்கு ஞானோபதேசம் செய்து; திருநீற்றின் ஒளிகண்டு - திருநீற்றின் விளக்கம் ஓங்கச் செய்து; மன்னிய........வருகின்றார் - நிலைபெற்ற சிறப்புடைய சீகாழியில் அவதரித்த மறையவராகிய ஆளுடைய பிள்ளையார் வருகின்றவராகி,

391

1657. (இ-ள்.) தீந்தமிழ்.......வந்து அணைந்தார் - இனிமை பொருந்திய தமிழ் நாடாகிய பாண்டிநாட்டினின்றும் போந்து எழுந்தருளிச் செழிப்பைத் தரும் காவிரியானது வாய்ப்புடைய வளங்களையெல்லாம் தருகின்ற சோழநாட்டில் வந்து சேர்ந்தவராகிய ஆளுடைய பிள்ளையார்; வாக்கினுக்கு.........என - திருநாவுக்கரசு நாயனார் அங்குத் தங்கியிருந்தருளும் செய்தியைக் கேட்டு, "விரைவாய் அவரிடம் சென்று சேர்வேன்" என்று உறுதி பண்ணி; பூந்துருத்தி........அணைந்தார் - திருப்பூந்துருத்தியாகிய வளநகரின் புறம்பு உள்ள வயல்கள் சூழ்ந்த இடத்தில் வந்து அணைந்தருளினர்.

392

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.

1656. (வி-ரை.) பொன்னிவலங்கொண்ட - காவிரி, வலமாகச் சுற்றி வந்தது போன்ற அமைப்புடைய. வலங்கொள்ளுதல் - வலமாகச் சுற்றி வழிபடுதல். தற்குறிப்பேற்ற அணி. "மலர்நீரால் வழிபட்டுச், செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத், தெம்பிரானை இறைஞ்சலின்" (57) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. தலம் காவிரிக்குத் தென்கரையில் உள்ளதாதலின் காவிரி வலம் சுற்றிச் செல்வது என்றார். துருத்தி என்றது ஆற்றிடைக்குறை. காவிரி வலமாய் வருதலால் பூந்துருத்தி யென்றாயிற்று" என்பர் ஆறுமுகத் தம்பிரனார்.

அவர் பூந்துருத்தி (க்கண்) இருப்ப - என்க. ஏழனுருபு தொக்கது. இருப்ப - "இருந்தார்" (1655) என்று மேற்பாட்டிற் கூறியபடி இருக்க.

கல்மனத்து வல் அமணர் - கன் (மனம்) என்றும், வல் - என்றும் இருவகையாலும் கூறியது, நாயனாரைத் தமது ஆசாரியராகக் கொண்டு நலம் பெற்றதெல்லாம் மறந்து, அவரைக் கொல்லும் சூழ்ச்சியினை ஒருமுறையன்றி நான்கு முறையும் செய்து அபசாரப்பட்டமை கருதியும், ஒருமுறை தோல்வியுற்றும் மும்முறையும் வாதம்செய்த கேடான வன்மை கருதியும் ஆம். இருவர்பாலும் செய்த அபசாரம் கருதி இருவகை கூறியதென்பதுமாம்.

கட்டழித்தல் - பொய்யே கட்டிய செயல்களை எல்லாம் குலைத்தல் - "கையர் பொய்யே கட்டி நடாத்திய" (புராண - வர - 20).

தென்னவன் கூன் - பிள்ளையார் திருவருள் பெறுமுன் கூன் நிமிராது நின்ற நிலை குறிக்கத் தென்னவன் என்று இலேசினாற் சுட்டினார்.

அருளி - "வேந்தனு மோங்குக" (பிள்ளை - தேவா - கௌசிகம் - திருப்பாசுரம் - 1.) "தென்னன் கூன்நிமிர்ந்தன்றே" (திருஞான - புரா - 847) என்று பாடிய அளவினால் கூன் நிமிர்ந்ததாகவும், சிரபுரச் சிறுவர் தீண்டித் திருநீறு பூசப் பெற்று முன்னை வல்வினையாகிய சஞ்சிதம் நீங்கி இருவினை ஒப்புப்பெற்று முதல்வனை அறியுந்தன்மை பெற்றமையால் பாண்டியனுக்கு ஞானோபதேசம் செய்தருளி ஆட்கொண்டமையினாலே அருளி என்று சிறப்பிற் பிரித்துக் கூறினார். அருளி - வைகைக் கரையாகிய தீக்கை மண்டபத்திலே மெய்ஞ்ஞானோபதேசம்