அருஞ்சொற்பொருள் அகரவரிசை | 1439 |
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
எண் | பக்கம் எண் | அகடு - நடுவிடம் | 30 | அகத்தீசன் - உள்ளத்தில் எழுந்தருளிய கடவுள் | 383 | அகந்தகர்க்கும் - செருக்கைப் போக்கும் | 160 | அகல்வினீங்கல் - நெருங்கல் | 55 | அகற்சி - பிரிதல், தொலை | 41, 91 | அகற்சிப்பொருள் - சேய்மைக் கண்ணுள்ள பொருள் | 962 | அகன்பாருளார் - மனிதர் | 1290 | அகை - உயர்ச்சி | 59 | அகைத்தல் - அறுத்தல், கிளைத்தல் | 32, 401 | அகோர கைவல்யப் பிரதம் | 189 | அக்கரம் - அழிவற்றது | 853 | அக்கவடம் - கண்மணிமாலை | 428 | அங்கணங்கண் - அவ்வவ் விடத்தே | 453 | அங்கணன் - சிவபெருமான் | 1257 | அங்கதம் - தோளணிமாலை | 269 | அங்கநாடு | 613 | அங்கியுறழும் - தீயை ஒக்கும் | 261 | அங்கிவினை - வேள்வித் தொழில் | 1321 | அங்குரப் படுத்தல் | 1294 | அங்குரம் - முளைப்பாலிகை | 474 | அங்கையெறிதல் - அழகிய கைகளைத் தட்டல் | 824 | அசிதோதம் - சீதோதம் | 608 | அசித்தார்த்தல் - நகைத்து ஆரவாரஞ் செய்தல் | 824 | அசும்பு - துளி | 17, 33, 159, 169, 682 | அச்சன் - தந்தை | 282 | அச்சுதம் - அறுகு, அரிசி | 891, 1320 | அஞர் - அறியாமை, துன்பம் | 36, 287 | அஞ்ஞை - தாய் | 311, 848 | அஞ்சலி - வணக்கம் | 1288 | அஞ்சித்தல் - வணங்கல் | 296 | அஞ்சிலோதியர் - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்கள் | 110 | அடரூழ் - தீய வூழ் | 215 | அடர்தல் - செறிதல் | 505 | அடர்த்தல் - கொல்லுதல் | 505 | அடர்த்து - கலாய்த்துக் கொண்டு | 539 | அடர்ந்து - பறித்து | 61 | அடா - பொருந்தமாட்டா | 375, 936 | அடுக்கம் - அரைமலை | 31, 245, 1194 | அடைகிடக்கும் - அவயங் காக்கும் | 331 | அடைச்சல் - அடைதல் | 731 | அடைச்சி - செருகி | 1036 | அடையார் - பகைவர் | 627 | அடைவில்- முறைமையில் | 334 | அடைவு - படிமுறை | 502 | அட்டி - அப்பி | 206 | அட்டிட்ட - அழித்த | 293 | அட்டிய - நிறைந்த | 213 | அட்டு - செறிந்த, கெடுத்து | 184, 397 | அட்டுதல் - சொரிதல் | 751 | அட்டொளி - உருக்கிய ஒளி | 12 | அணங்கிய - பொருந்திய | 228 | அணங்கு - வருத்தம், தெய்வப்பெண், வெறியாட்டு | 31, 877, 1204 | அணங்குவது - துன்பமடைவது | 1252 | அணவியும் - எய்தியிருப்பவும் | 530 | அணவினார் - அடைந்தார் | 978 | அணவினேன் - அணுகினேன் | 212 | அணிகா - அணியட்டுமா | 1251 | அணிக்கண் - அண்மையில் | 1250 | அணித்தலை - அணிமையான இடம் | 881 | அணித்து - நெருங்கியது | 505 | அணித்தொகை - அணிகலன்களின் கூட்டம | 76 | அணிந்தது - அழகு செய்து கொண்டது | 17 | அணிந்து - பொருந்தி | 13 | அணிமலை | 613 |
|
|
|