| எண் | பக்கம் எண் |
| அண்டப்பித்தி - அண்டச் சுவர் | 127 |
| அண்டம் - முட்டை | 331 |
| அண்டர் - இடையர், தேவர் | 22 |
| அண்டாபரணர் - ஒரு முனிவர் | 637 |
| அண்ணம் - மேல்வாய் | 526 |
| அண்ணலார் - இறைவனார் | 452 |
| அண்ணல் - பெருமை | 17 |
| அண்ணி - அணுகி | 590 |
| அண்மி - நெருங்கி, சேர்ந்து | 17, 67 |
| அண்முதோறும் - நெருங்குந்தோறும் | 80 |
| அண்முவார் - சார்ந்து இன்புறுவார் | 415 |
| அதர் - வழி | 1235 |
| அதளுடையான் - சிவபெருமான் | 574 |
| அதிங்கம் - அதிமதுரம் | 229 |
| அதிரொலி - பேரொலி | 398 |
| அதுக்கல் - அடித்தல் | 698, 825 |
| அத்தம் - சுரம் | 1251 |
| அத்தன் - முருகன் | 760 |
| அத்தாணி - அரசிருப்பு | 250 |
| அத்தி - கடல், யானை, தெய்வ யானை | 782, 879 |
| அத்தியாபகேசரம் | 183 |
| அத்துவா - வழி | 306 |
| அநாமிகை - பௌத்திர விரல் | 911 |
| அந்தநாளங்கி - ஊழிக்காலத் தீ | 671 |
| அந்தரத்திமையார் - தேவர் | 147 |
| அந்தரம் - விண் | 17 |
| அந்தரர் - தேவர் | 121 |
| அந்தித்தல் - இறத்தல் | 462 |
| அந்தித்தவர் - முடிவைக் கண்டவர் | 262 |
| அந்திப்ப - முடிய | 1317 |
| அந்தில் - அவ்விடம் | 146, 331 |
| அபாவநிலை - யான் எனதற்ற நிலை | 531 |
| அமர - ஒப்ப | 279 |
| அமரர்ஆன் - காமதேனு | 19 |
| அமராபதீசன் - தணிகையில் இந்திரன் வழிபட்ட கடவுள் | 888 |
| அமரிப்பு - முழக்கம் | 807 |
| அமர் - போர் | 188 |
| அமர்த்தல் - போர் செய்தல் | 110 |
| அமர்த்தார் - போர் செய்தார் | 794 |
| அமர்த்துழி - போர் செய்யுங் கால் | 854 |
| அமலநாயகன் - சிவன் | 700 |
| அமலல் - நிறைதல் | 694 |
| அமலுதல் - செறிதல் | 490 |
| அமன்ற - பொருந்திய | 112 |
| அமன்று - நிறைந்து | 57 |
| அமை - மூங்கில் | 1185 |
| அமைவர - அமைதியுண்டாகும் படி | 1259 |
| அம்பர் - அங்கு | 617 |
| அம்பல் - முகிழ் முகிழ்த்தல் | 989 |
| அம்புயம் - அழகிய தோள் | 618 |
| அம்மனைகள் - அழகிய வீடுகள் | 441 |
| அம்மை - முற்பிறப்பு | 861 |
| அயம் - நீர், இரும்பு | 307, 1131 |
| அயராமை - வாடாமை | 1131 |
| அயர்த்தல் - உணர்விழத்தல் | 835 |
| அயன் - நான்முகன் | 97 |
| அயன்மை - அன்பிலாமை | 1240 |
| அயிராவணம் - இறைவனூரும் யானை | 963 |
| அயிர்த்தல் - ஐயங்கொள்ளுதல் | 71, 116 |
| அயிர்ப்பிறக்கம் - நெய்தல் | 1295 |
| அயிறல் - உண்ணல் | 53 |
| அரங்கும் - கெடுகின்ற | 438 |
| அரணம் - பாதுகாப்பு | 251 |
| அரணம் - உடம்புக்கீடு | 782 |
| அரணம் - கவசம் | 1301 |
| அரணி - தீக்கடைகோல் | 1317 |
| அரண்டக - பாதுகாவல் அமையும்படி | 556 |
| அரதன அம்பலம் - இரத்தின சபை | 95 |
| அரதனக் கலசம் - பொற்குடம் | 4 |
| அரத்தகம் - அலத்தகம் | 1295 |
| அரந்தை - துன்பம் | 8, 40 |
| அரம்பு - குறும்பு | 280 |
| அரலை - கழலை | 550 |
| அரவநெடுங்கயிறு - பாம்பாகிய நீண்ட கயிறு | 121 |
| அரவப்பள்ளி - பாம்புப் படுக்கை | 434 |