| எண் | பக்கம் எண் |
| அரவமாலையன் - சிவபெருமான் | 94, 225 |
| அரவம் - ஒலி | 131 |
| அரவிந்தம் - தாமரை | 274 |
| அரற்றின் - அழுதால் | 411 |
| அரன் - சிவபெருமான் | 4 |
| அராத்தாம்பு - பாம்பாகிய தாம்புக்கயிறு | 123 |
| அராப்பள்ளி - பாம்புப் படுக்கை | 96 |
| அராவணைக் கடவுள் - திருமால் | 875 |
| அரி - கூர்மை, சிங்கம் | 184, 637 |
| அரிசனம் - மஞ்சள் | 72 |
| அரிட்டம் - மோர் | 541 |
| அரித்து - வடிகட்டி | 608 |
| அரிப்பன்றி - அழகிய பன்றி | 1180 |
| அரிப்பியா - அரித்தலைச் செய்யாத | 1268 |
| அரியல் - கள் | 58, 548 |
| அரில் - குற்றம் | 189 |
| அரில்தப - குற்றம் நீங்க | 381 |
| அரிவருட கண்டம் | 609 |
| அரினி | 201 |
| அருக்குதல் - அன்புகொள்ளுதல் | 384 |
| அருங்கதி - வீடுபேறு | 463 |
| அருங்குரைத்து - அருமையுடையது | 181, 939 |
| அரைப்பட்டம் - ஒட்டியாணம் | 152 |
| அலகிடல் - கணக்கிடல் | 914 |
| அலகு - பலகறை | 34 |
| அலக்கண் - துன்பம் | 183, 262 |
| அலங்கல் - கெடுதல், விளங்கல் | 12, 79 |
| அலங்கிய - விளங்கிய | 42 |
| அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு | 870 |
| அலப்படை - கலப்பைப் படை | 54 |
| அலம் - கலப்பைப்படை, துன்பம் | 22, 344 |
| அலம்பல் - ததும்புதல் | 1142 |
| அலரி - கதிரவன் | 101 |
| அலர் - பலருமறிதல் | 989 |
| அலர்கரம் - மலரைப் போன்ற கை | 753 |
| அலர்த்தவிசினான் - நான்முகன் | 1297 |
| அலர்நாவகத்தணங்கு - கலைமகள் | 1067 |
| அலர்மேலோன் - நான்முகன் | 871 |
| அலவர் - கலப்பைப் படையுடையவர் | 87 |
| அலைத்தல் - வருத்தல் | 1173 |
| அலைபுரி - வருத்தலைச் செய்கின்ற | 233 |
| அல்கல் - தங்கல் | 926 |
| அல்கும் - சேருகின்ற | 435 |
| அல்யாப்பு - இன்ப துன்பக் கட்டுகள் | 429 |
| அல்லகாத்திரி - தீமையைப் போக்கியருள் | 411 |
| அல்லனுக்கு - இருளைக் கெடுக்கின்ற | 94 |
| அல்லாக்கும் - மயங்கும் | 120 |
| அல்லாந்தது - சுழன்றது | 1249 |
| அல்லி - அகவிதழ் | 1161 |
| அல்லுறழ் - இருளைப்போன்ற | 234 |
| அவசம் - பரவசம் - தன்னிலை யிழத்தல், முனைப்பறும் நிலை | 170, 472 |
| அவதி - முடிவு | 228 |
| அவல் - பள்ளம் | 89, 1269 |
| அவித்த நன்மையன் - நன்மை யில்லாதவன் | 730 |
| அவித்தல் - கெடுத்தல் | 169 |
| அவிர்தல் - விளங்குதல் | 21 |
| அவிழ் - பருக்கை | 491 |
| அவ்வ - அவ்வவற்றின் | 517 |
| அவ்வை - தமக்கை | 1243 |
| அழம் - பிணம் | 1219 |
| அழலம் பிழம்பின் - தீயின் அழகிய திரட்சியைப்போல | 309 |
| அழல்செய் காந்தள் - தீப்போன்ற செங்காந்தள் | 155 |
| அழற்கால அரனார் - காலாக்கினி உருத்திரர் | 117 |
| அழற்றி - வாட்டி | 374 |
| அழற்றும் - கனற்றும் | 216 |
| அழனீர் - வெந்நீர் | 574 |
| அழுகுசேறு - பதப்பட்ட சேறு | 54 |
| அழுங்க - கெட | 51 |
| அழுவம் - பரப்பு | 657 |
| அளகு - கூகைப்பெடை | 31 |
| அளமருதல் - சுழலுதல் | 58 |