பக்கம் எண் :

1526தணிகைப் புராணம்

திருத்தணிகையாற்றுப்படை

விநாயகர் காப்பு

நேரிசை வெண்பா

 சீரார் தொடைபுனைந்த செம்பாவை முன்புபோ
 லேரார் தணிகை யிளவற்கு - நேராகக்
 கூட்டுமால் வேற்றுருவங் கொள்ளாமை யெப்பொருளுங்
 காட்டுமா லைங்கைக் களிறு.

நூல்

           பொன்மலைத் திருவிற் பன்னக நெடுநாண்
           மாயப் பகழித் தாயக் குரிசின்
           முரணமை யிருகாற் றிரண்மறைப் புரவி
           யலர்மரை வாழ்க்கை வலவத் தேரும்
 5 வழங்குதற் கமையா வண்மையி னிசைக்கும்
           பெருந்தகு பாடற் றிருந்திசைப் புலவ
           ரறன்கடைக் ககலாப் பிறங்குதம் முளத்திற்
           சாலாக் கல்வி மாலார்க் ககலா
           வரன்மாண் டமைந்த வுரன்மாண் பலகையிற்
 10 றண்டா விருப்பி னெண்டோண் முதல்வனோ
           டானாது பயிலிய வருமறைக் கேள்வி
           மாயிருந் தமிழ்க்கடல் வடமொழிக் கடலென்
           றாயிரு கடலு மாற்றலிற் கடையா
           வையந் திரிபெனு மழல்விடம் படாது
 15 வெய்யசெம் பொருளெனு மிளிர்தீஞ் சுதைத்திர
           ளாராக் காதலி னாராது கைப்பவு
           மூன்றுவிர லழுந்தா துடறசை திணிந்து
           கான்றதேந் தெரியற் கருங்குழன் மகளிர்க்
           கணங்குள நிறீஇ யாருயிர் கவர்க்கும்