பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1527

 20 வளங்கவின் கொழிக்கும் விளங்குசீ ரிளமையும்
           பல்வகைத் தொழிலும் பண்புற நவின்று
           சிந்தை வழிச்செலு மைந்துநிலை பெறீஇய
           ரளவினைத் திறத்தி னயரா யாக்கையு
           மளகைக் கோமா னுளமழுக் கறுப்ப
 25 நிலந்தினக் கிடந்த நெடுநிதிச் செல்வமு
           நீடின் றிரியு நிலைமை நாடி
           யேற்போ ரங்கைக் கொடைக்கட னிறுத்து
           நோற்போர் நோற்கும் நோன்மைசா லறனெனு
           முறுதி யாக்க மொய்யெனக் கழலவும்
 30 வரைத்திரள் புரள்விற் றிரைத்தெழுந் திரைக்கணம்
           விலங்கின வழங்கும் விழுக்கலன் செறித்து
           மொளிறுவே லழுவத் துருத்தெழுந் தடர்த்துக்
           குளிறுவார் முரசும் பிளிறுமால் யானையும்
           வைத்தபல் படையும் வழாதுகைக் கொண்டு
 35 பராபவத் தெவ்வர் வரிசையி னிறுக்கும்
           திறைகே "ரிமை முறைநேர் நடாவியும்
           தத்தந் தொழிலிற் றலைநின்று வளர்க்கும்
           பொருளெனும் வெறுக்கை போற்றாது நழுவவும்
           மிஞிறுந் தேனும் வெறிகவர் தும்பியும்
 40 கஞலிப் பட்குரல் கஞற்றுவ சுழலும்
           இருடுஞ்சு மலர்ப்பொழின் மருள்சில் லோதிப்
           பூவார் சோலைப் புறத்தகப் படுத்து
           மேவரத் தடைஇய விதுக்குறை கடுக்கும்
           திவளொளி மாண்ட குவவுநுதல் வாணுதல்
 45 தீங்கதி ரமிழ்தத் திங்கட் பிளவி
           னீங்குகார்க் கறையு நிலாத்தவழ் வெண்மையும்
           விராயுருக் கொண்டென மிளிர்மதர் மழைக்கட்
           செங்குமு தத்துச் சிறுமறி கிடந்தெனச்
           செவ்வா யகத்த செயிர்தீர் வெண்பல்
 50 விலங்குபாய் கதிர்க்குழை வீழ்ந்துசெகிற் றுயல்வர
           வள்ளையி னொழுக்கிய வள்ளெழிற் செஞ்செவி
           செவ்வாய் கவுட்டுணைச் சேல்விழி நெற்றி
           யிவ்வா யுறுப்பா னின்சுவை யமிழ்த
           வுறுகொடை யாற்றி வறிதுகொடை காட்டும்