| 55 வளைநிதி தன்னைக் குடுமிகைக் கொண்டவ் |
| வளைமேல் கொண்டு வயங்கொளி தோற்றும் |
| பதும மாநிதி யிதுவெனக் கவன்று |
| தாவா வுறுவர் மேவா வுள்ளமு |
| மோவப் படமென வுஞற்றுறு திருமுகப் |
| 60 பகுவாய்ப் பொற்குழை மகர மீனான் |
| றைதுமீக் கிடத்தலி னைங்கணைக் கிழவோன் |
| வெய்துதன் னாணை விளக்கிய வுயர்த்த |
| வணங்குதவழ் கொடியி னிணங்குபணை வேய்த் |
| காம்பு புடையடுத்த கதிர்மணிக் குன்றின் [தோட் |
| 65 தோள்புடை யடுத்த சுடர்ப்பூட் கொங்கை |
| குவிமுலைத் துணைகொள் சவிமணி மார்பிற் |
| றத்தம தேணி கடவாது தணிய |
| நள்ளுநின் றுணர்த்துந் தள்ளாக் குறியி |
| னணிவயிற் றொழுகிய மணிமயிர் வல்லி |
| 70 நெடுகுமயி ரொழுக்கு நெடுவழிப் படர்ந்து |
| கடுமுலைக் கோட்டுக் களிறுபட வெடுத்த |
| படுகுழி யனைய பயம்படு கொப்பூழ் |
| நடுநின்று வாழ்வோர் நலத்தொடு முரண |
| நடுநின்று தேய்ந்த விடுகுகொடி மருங்குல் |
| 75 வையக முயிர்த்தோன் மதிபுனைந் தியற்றலிற் |
| கைபுனைந் தியற்றுங் கதிர்மணித் திண்டேர் |
| கடாதுருக் கொண்டோடுந் தடாதபே ரல்குற் |
| கீழ்மே லாகக் கிளர்ந்தெழி னத்தகு |
| வாழையொடு பொரூஉம் வார்ந்தசெறி குறங்கின் |
| 80 வேற்றொரு தாமரை மேவந்து தொழில்செய |
| வீற்றிருந் தருளும் விரைமல ரேய்க்கு |
| மலத்தக மலர்ந்த நலத்தகு சீரடி |
| மயிலியன் மருளு மியன்மட மாதரைச் |
| சீலம் விழைவே செயல்குறி யிவற்றான் |
| 85 நால்வகைப் பேதமு மாலறத் தெரிந்து |
| மருந்துமந் திரத்துந் திருந்துவிழை வேற்றித் |
| தேயம் பயிற்சி சேட்டை யியல்பே |
| யின்பத் துறையே யிருவகைத் தொழிலே |
| யிங்கித வகையே யிவைநனி நாடி |