| | 90 யிருவகைப் பொழுதொடு மேற்ப மருவிய |
| | மூன்று காலமு மூன்று வேகமு |
| | மொப்பக் கலவி யுஞற்றுபே ரின்ப |
| | வவாவுளம் பொதிந்துகொண் டழற்றுவெம் படர் |
| | தவாது பிறைபோல் தணிவின்றி வளர [நோய் |
| | 95 வுவாமதி போல வுருவே தபவும் |
| | கடவுட் பொங்கரும் தடமருப் பாவும் |
| | சிந்தா மணியு நந்தா நிதிகளும் |
| | கலன்முத லான வளம்பல கொழிப்ப |
| | பல்வகைக் கணமும் பணிந்தெழுந் தேத்த |
| | 100 தெவ்வுத் தானவ ரவ்வித் தேங்க |
| | விரிகதிர்ப் பிழம்பு மரிமான் றவிசிற் |
| | களிகூர் நெஞ்சாற் காவல் வைகு |
| | மொளிகூர் மகவா னுறுபத மாதி |
| | யெளிதினுய்த் தளிக்குந் தெளிவினை போலாது |
| | 105 பார்முதிர் புணரிப் பாயற் கடவுள் |
| | வார்மதுப் பொகுட்டு மரைமலர்ப் புத்தேள் |
| | என்றிவர் தமக்கு மெய்தற் கரிய |
| | சரியை கிரியை யோகத் தவநிலைப் |
| | பெயர்பொச் சாப்பப் பிறக்கணித் துகவு |
| | 110 மூன நாடக முஞற்றிய திருவருள் |
| | ஞான நாடக நவிலிய மாறலு |
| | மானா மலப்பகை நோனாது கழலத் |
| | தானா னந்தத் தனியுயிர் மடங்கக் |
| | கட்காண் குருமுதற் கடவு ளாகி |
| | 115 உயிரே யவத்தை யுணர்த்துந் தன்மை |
| | யருளி னியல்பே யாங்கதன் பயனே |
| | பெரும்பெயர்த் திறமே பெற்றவர் முறையென் |
| | றனைவகை யேழு மரிறபத் தெரிப்பத் |
| | தாழாது கேட்டு வீழாது சிந்தித் |
| | 120 தங்கைக் கொண்ட வமிழ்தெனத் தெளிந்து |
| | பொங்கு பேரின்பம் புணராது புணரு |
| | நிட்டை கூட நிலையது நீங்கவும் |
| | பஃறிறப் பகைஞர் படையொடு நேர்ந்தென |
| | வெஃறிறங் காட்டாது வீற்றுவீற் றுடற்றும் |