| அழுத்துவன் (329) நாடக மகளிர் (331) ஆடற்கிண்கிணி முதலியவை (331 + 332) முழங்கொலியானும் (333) புரிசை முதலியவும் (334 + 336) பிறவும் மன்னுதலானும் (337) கடலும் வரையும் (338) தொக்கு அண்மித் துறையாடி (339) இருமருங்கும் (340) வதியும் பேற்றினைத் தெரிக்கும் (341) வீரட்டமும் (343) கோட்டமும் (344) பொன் முதலியவற்றை (345) திரைக் கையிற் றூஉய்த் திளைத்து எழுந்து (346) ஒழுகும் நந்தியாற்றுப் புனல்மடுக்கும் (346 + 347) சாலியும் கரும்பும் (348) கதலியும் தெங்கும் (349) கமுகும் (350) பொதுளி வளம்பல வுறந்த (351) பண்ணை சூழ (352) அவரை முதலியவை விளையும் (353 + 354) கொல்லையுள்ள புறவம் எனவும் (355 + 360) முல்லை பூவை முதலியவை யுடைத்தாய் (355) வளியுளர்ந்து எடுப்ப மறுபுல வரைப்புங் கமழ்ந்து (358 + 359) வண்டின மழைக்கும் (359) அரும்புலப் புறவம் ஒருபுறஞ் சூழ (360) செருந்தி முதல் நாக மீறாகக் கிடந்த மரங்களும் (361 + 371) அன்றி யனைத்தும் கறிக்கொடி முதலியவும் (372) மற்றும் பரித்து (373) வல்லியொன்றே பூத்தருந்தன் இகழ்ச்சியை நாடித் தத்தமிசை விளக்குவபோல் (374 + 375 + 376) சுரும்பு முதல் குயில் ஈறாகவுள்ளவை குரற்காட்டிப் (377 + 378 + 379) பொதும்பர் மருங்கு வளைஇ (380) நுண்டளித்தே னோலாதுதிவளும் (381) பொன்னகர் வறுமையை முன்னிநக் காங்கு (383) மணிக்குப்பையும் தரளக் குவாலும் (384 + 390) தவழ மிளிரும் மலைப்புனத்துக் காக்கும் (391 + 392) மதிமுகத்தார் விடுக்கும் மணியோ கானவர் கணையோ (393 + 394 + 395) அலைத்தர (396) விசும்பின் கலன்களும் மின்னுக் கொடிகளும் வீழ்ந்தென்ன (396 + 397) வரையில் காழுந் தாமமுந் ததைஇய (தணிகை) (398 + 399 + 418) மண்டப முதலியவை (400) வேற்றுமை தோற்றாவாய் (402) வளந்தழீஇ (403) எம்மருங்கும் அகிற்றூமமும் பளிதக் குப்பை கான்ற தீம்புகையும் (403 + 404 + 405 + 406) விண் கெழுமி யிமைப்பன செய்யவும் (406 + 407) மறுகும் வீதியும் நவமாகி யிமையாமை செய்யவும் (408 + 409 + 410) மண்டலம் விண்டலம் மாற்றிய தென்ன (411) ஏர்குலாய்க் கிடந்த (தணிகை) (412 + 418) திசைகாப்பாளரும் தேவரும் (413) ஆதிய கடவுளரும் (414) பழிச்ச (415) சாறுநாளல்ல தறியாது (416) பல்சிறப்பினதாய் நிலைபெற்றுள்ள தணிகை மலைகிழவோன் என வினைமுடிக்க (417 + 418). தணிகையாற்றுப்படை யென்றதற்கு வீடுபெறச் சமைந்தானோர் இரவலனை வீடுபெற்றானொருவன் தணிகையினிடத்தே ஆற்றுப்படுத்ததென்று பொருள் கூறுக. திருத்தணிகை யாற்றுப்படை விருத்தியுரை முற்றிற்று. வேலுமயிலுந் துணை. |