| காண்டொறும் களியே னாகி (202) உடங்கு சென்றிறுப்பான் எழலும் (203) நோய் தன்னம் நீங்க (204) யாக்கைவலி யெய்த (205) ஊக்கம் உந்த எழுந்து (207 + 208) அடி பெயர்த்தோறும் பிணிநழுவ (209) மகிழ்வாற் பாடாஅச் (210 + 211) சென்றுநகர் நுழைதலும் (212) நோய் ஒருகூறு விலங்கக் (213) காட்சி யார்வமீர்த்தலின் (214) நந்திநதி குடையாது (215) முனிவர்சுனை ஆடாது (216) மலைப்பகைஞன் கயம் படியாது (217) நாகவண்சுனை தோயாது (218) விண்டு தீர்த்தம் குளியாது (219) அலரவன்சுனை முழுகாது (220) சரவணப் பொய்கை துளைந்து (222) இவர்ந்து (223) நேர்கண்டு தொழுது (226) பொற்பினர் மிடைதலின் (227) ஒதுங்குபு சூழ்ந்து (229) வாய்தல் நுழைந்து (232) சென்று (234) பணியா (236) தாழ்ந்து (237) தொழுது (238) ஏழும் ஐந்தும் விராயியக்கி ஒளிரும் (242 + 243 + 244) அருணிலை பிணி தீர்த்தருள் கொழிப்ப (245 + 246) இருந்தனர் களிப்பப் (251) போற்ற (252) ஏத்த (253) நோக்கமொடு வீற்றிருக்கும் (254 + 255) எழில்காண்டலும் (255) நோயிரியல் போக (256) நாற்பொருளுந் துவன்ற (257) மகிழ்ச்சி வீக்க (262) முன்னுயங்கல் எய்யேனாகி இறுமாப்பெய்தித் (264 + 265) தெரியாது திருமுன் னிற்ப (266) இருமைப் பயனு மளிக்கும் (267) பூதியும் பூச்சு மளித்திட்டு (268) உலகை என்வசமாக்கித் (269 + 270) தன்னிலையிலிருத்தி (271) விட்டருள அருள்கொண்டு (272) ஒழியாது ஒழிந்து வருகின்றனன் (273) அப் பெருமானருள் விளையாடலைத் (274) தவமேம்படுந கேண்மதி (275) ஆக்கியும் (276) ஒழித்தும் (277) தணித்தும் (278) ஏற்றியும் (279) அகன்றும் (280) கலந்தும் (281) உவர்த்தும் (282) நயந்தும் (283) தொழின்மை இயற்றி (284) இன்பருள் பெற்றியன் (285) அதுவன்றி; இருமுது குரவராகிய முதற் சுற்றமொடு (286) உலகம் தோற்றுதற் பொருட்டு (287) ஐம்முகன் முதலிய இறைவரும் (288) மனோன்மனி முதலிய சத்திகளும் என வேறு வேறாகியும் (289 + 292) மகேசனு முருத்திரனும் இவர் சத்திகளும் (294) தந்திமுகனும் தாமுமாகியும் (295 + 298) ஞானக்கிரியைக ளியங்க (299) யானையைக் கானவர் மாதினை மணந்தும் (300 + 301 + 302) பொருட்டுறை நடப்பத் தோற்றிப் புரியும் ஆற்றலெய்யான் போல (303 + 305 + 306) மந்திர மற்றும் ஆற்றிச் சூர்வலி காற்றி யோம்பியும் (307 + 308) அறிந்து அறிவிக்கும் அவ் வியல்பைக் காட்டுவன் (309 + 310) அதுவன்றி; மூவகை யுருவாய் (311) உயிர்த்தும் முயங்காப்பொருள் (311 + 312) அமைத்தும் படாத பெருந்தகை (313 + 314) அமைந்தன நடாவியும் (315) அருந்திறற்றானாய் நின்று காண்தனி முதல் (316 + 317) அளியன் (318) ஒளியன் (319) வெளியன் (320) அளவன் (321) இன்னானொருவனை முன்பு சென்று (322) போற்றுதியாயின் (323) பேதுறு நோயும் காரண நோயும் இரியக் (324 + 325) கடைக்கணித் தருளி (326) கொடைக் கடன் ஆற்றி (327 + 328) அகம்படித் தொழின்மையின் |