பக்கம் எண் :

740தணிகைப் புராணம்

 நீளிடை யேகுமி னென்று நீக்கல்போற்
 றாளுயர் நெடுங்கொடி ததைந்த சைந்தவே.

(இ - ள்.) கோளையும் நாளையும் குயின்குழாங்களையும் நோக்கி "நம்மை உடைமையாகக் கொள்ளும் இறைவன் தேர் பொருந்தியது சேய்மைக்கண்ணே செல்லுங்கோள்" என்று கூறி நீக்குதலைப்போல அத்தேரின்கட் கட்டிய காம்பாலுயர்ந்த நீண்ட கொடிகள் நெருங்கி அசைவுற்றன வென்க.

(வி - ம்.) கோள் : சூரியன் முதல் கேதுவி னிறுதியாகவுள்ள ஒன்பான் கோள்கள். நாள்கள் : அசுபதி முதலாக இரேவதி யிறுதியாகவுள்ள மீன்கள். குயின்குழாம். மேகக்கூட்டம். தாள் - அடி.

(274)

 வல்லிசை கேட்டொறு மாழ்கு மாவென
 ஒல்லலன் முரசங்கேட் டுயங்குந் தேவர்கள்
 மெல்லிசை கேட்டென வுவகை வீக்குறப்
 பல்லிய மெங்கணும் பரந்தி யம்பின.

(இ - ள்.) வலிய பறையினிசையைக் கேட்ட துணையானே வருந்தும் அசுணமாப்போலப் பகைவனாகிய சூரன் முரசினொலியைக்கேட்டு வருந்துந் தேவர்கள் அவ்வசுணமா மெல்லிய இனிய இசையினைக் கேட்டாற்போல மகிழ்ச்சி பெருக எல்லாவிடங்களிலும் பலவாச்சியங்கள் பரவி யொலித்தன வென்க.

(வி - ம்.) ஒல்லலன் - பகைவன். வல்லிசை - பறையோசை. மெல்லிசை - இன்னோசை. இதனைப் "பறைபட வாழாவசுணமா" என்னும் நான்மணிக்கடிகையானும்; "பொன்வி ளைத்த புணர்முலை யாள் சொல, இன்ன ளிக்குரல் கேட்ட வசுணமா, அன்னதாய்மகி ழெய்துவித் தாளரோ, மின்வளைத்தன மேகலை யல்குலாள்," என்னும் சிந்தாமணி பதுமையாரிலம்பகம் 237ஆம் செய்யுளாலு மறிக. இதனைப் பறவை யென்பாருமுளர். இவைகளுள்ள விடங்களில் வேட்டஞ் செய்பவர் சென்று இன்னிசையைப் பாட இவைகள் இசையி லீடுபட்டு மெய்ம்மறந்திருக்கு ஞான்று வல்லோசையினை யுடைய பறையினை அடித்தலால் இவை துண்ணெனத் திடுக்கிட்டுக் கீழ்வீழ்தலைச் செய்யப் பற்றிக் கொள்வார்கள் என்ப.

(275)

 ஏழுல கெனத்தனோ டெண்ணப் பட்டுவிண்
 வாழுல கிறாதுவற் புறுத்த வள்ளறன்
 பாழிகண் டிடும்புவி படர்ந்திட் டாலெனப்
 பூழிவிண் ணிவந்தது புகையிற் சூழ்ந்தரோ.

(இ - ள்.) வரையாது கொடுப்போனாகிய முருகனது வலியினைத்தான் பலகாலுங் கண்டு வைத்துள்ள நிலவுலகானது ஏழுலகமென்று தன்னோடெண்ணப்பட்டு வானின்கண் வாழு முலகமானது கெடாது. நிலைபெற வானின்கட் சென்றாற் போலப்பூழி புகைபோலச் சூழ்ந்து விண்ணின்க ணெழுந்த தென்க.