| | தனைநுக ரொருவனைத் தருக்க ழித்தவவ் | | | வனைகழல் வலவனை வருத்தி தேரென | | | நினையுமு னவன்றர நிமல னேறினான் | | | அனைவரு மவரவ ரியல்பி னண்மினார். |
(இ - ள்.) தன்னை நிகர்த்த ஒப்பற்றவனாகிய ஆதிசேடனை மனத்தின்கணுள்ள செருக்கினைக் கெடுத்த அந்த அலங்கரித்தாலொத்த வீரக்கழலினை யணிந்த பாகனாகிய வாயுவினைத் தேரோடு வருத்துவாய் என்று சொல்ல நினைத்தற்கு முன்னர் வாயுவென்பான் தேரினைக் கொணர மலமற்றவனாகிய முருகன் ஏறினான் ஏனைய வீரரனைவரும் அவரவர் இயல்பினுக்குரிய ஊர்திகளிலேறிப் பொருந்தினா ரென்க. (வி - ம்.) தன்என்றது, ஈண்டு வாயுவை, வருத்தி : முன்னிலைப் பிறவினைமுற்று. வருவிப்பாய் என்பது பொருள். (271) | | திருமுகப் பரிதியந் தெய்வப் பேரொளி | | | பருகுபு பெருகொளி படைத்து மைதவிர்ந் | | | துருகெழு முழுமதி யும்பர் நின்றெனக் | | | குருமணிக் கவிகைமேற் குலாய தென்பவே. |
(இ - ள்.) திருமுகமாகிய செங்கதிர்க் கடவுளின் தெய்வத்தன்மை பொருந்திய மிக்க வொளியையுண்டு மிக்க வொளியை யுளவாக்கிக் குற்றம் நீங்கி நிறம்பொருந்திய உவாமதி மேலே நின்றாற்போல நிறம் பொருந்திய முத்துக் குடைமேலே விளங்கிய தென்க. (வி - ம்.) என்ப : அசை. மை, ஈண்டு களங்கம். குரு - நிறம். மணி - முத்து. (272) | | மானமின் றழிதரு மாயை மைந்தனைத் | | | தானினி யகலெனத் தம்மி னத்தினை | | | ஆனதோ ரொற்றுவிட் டகற்றச் சோடைகொண் | | | டானுழி தருவபோ லலைந்த சாமரை. |
(இ - ள்.) இறைவன் பக்கலிசைகின்ற சாமரைகள் பெருமையின்றிக் கெடுகின்ற மாயை என்பவள் மகனாகிய சூரன் பக்கலில் அசைகின்ற தம்மினமாகிய சாமரைகளை இனியாண்டுத் தங்காது நீங்குங்கள் என்று பொருத்தமானதொரு தூதினைச் செலுத்தி நீக்க அச்சாமரைகள் சடைவினைக் கொண்டு அவ்விடத்துச் சுழலுதலைப்போல அசைந்தன வென்க. (வி - ம்.) தான் : அசை. மானம் - பெருமை. தம் என்றது இறைவன் சாமரைகள். சோடை - கவலை. ஆன் - அவ்விடம். (273) | | கோளினை நாளினைக் குயின்கு ழாத்தினை | | | ஆளுநங் கடவுடே ரணுக லுற்றது |
|