| (இ - ள்.) ஏழுகடலி னொலியும் எழுவகை மேகங்களும் குழுமுகின்ற ஒலியும் மிக்க சேனையின் சிறந்த வொலியும் வேறோசைகளுந் தன்னெதிரே பொருந்துவ தருமையாகுமென்று சொல்லும் வண்ணம் இனிய வாச்சியம் கிளர்ச்சியுற்ற தென்க. (வி - ம்.) எழுவகை மேகம் - புட்கலாவர்த்த முதலியன. இன்னியம் - இசைக் கருவி. (267) | | படைத்திற நோக்கிமெய் பனிப்ப ரென்றுத | | | னுடைப்பெருங் கருணையா லும்பர் கண்களை | | | அடைப்பது கருதிமண் ணணுவிற் சென்றெனத் | | | துடைப்பருந் தூளிவிண் முழுதுந் தூர்த்ததே. |
(இ - ள்.) படையின் வகையினைக் கண்ணுற்று உடனடுக்க முறுவரென்று தனது பெரிய கருணையா னும்பர்கள் கண்களை மூடுவது கருதி நிலமானது அணுவடிவாகச் சென்றாற்போல நீக்குதற்கரிய பூழி வான்முழுதையும் மறைத்த தென்க. (வி - ம்.) மண் - பூமி. திறம் - கூறு. (268) | | இன்னணம் படையெழுந் தேகுஞ் சூர்முதல் | | | மன்னரி முகன்மகன் மரித்த பின்னவன் | | | தன்னொரு மகனிவர் தம்மைச் சேனைகட் | | | கின்னுயிர்க் காவல ராக்கி யெய்தினான். |
(இ - ள்.) இங்ஙனம் படையெழா நிற்கப் போர்க்குச் செல்கின்ற சூரனாகிய முதல்வன் நிலைபெறப் படைத்தலைவனாகிய சிங்கமுகன் மகனாகிய அதிசூரனும், இறந்ததன் பின்னவனாகிய தாரகன் கான்முளையாகிய ஒப்பற்ற அசுரேந்திரனும் ஆகிய இவர்களைப் படைகளுக்கு இனிய உயிர்க் காவலராகச்செய்து பொருந்தினா னென்க. (வி - ம்.) சூர் - சூரன். அரிமுகன் - சிங்கமுகன். பின்னவன் - தாரகன். (269) | | இடங்கழி கொண்டுயி ரிறுப்ப லென்றுசூர் | | | அடங்கருஞ் சீற்றமொ டண்மு செய்திபோய்த் | | | தடங்கடல் விடநுகர் சதுரன் சேய்முனர் | | | முடங்கிய கையினன் முனிவன் கூறினான். |
(இ - ள்.) போரின்கட் பொருந்தி உயிரைக் கெடுப்பேனென்று சூரன் அடக்குதற்கரிய சீற்றத்தினோடு போருக்குப் பொருந்துகின்ற செயலினைப் பெரிய கடலின்கணுண்டாகிய, நஞ்சினையுண்ட மேம்பாட்டினையுடைய இறைவன் மகனாகிய முருகன் முன்னர்ச்சென்று நாரதமுனிவன் வாயிற்பொத்திய கையுடையனாக நின்று சொல்லினா னென்க. (வி - ம்.) இடங்கழிகோடல் - நெருங்கல். சதுரம் - மேம்பாடு. இதனைச் "சதுரனெழிற் சோண சைலற்றுதிப்பன்" என்னும் சிவப்பிரகாசர் வாக்கானறிக. (270) |