பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்737

 வெளிறிலா யின்றுதீ வெளிறு தங்குவை
 தெளிகென வுற்பனஞ் செய்திட் டாலென
 ஒளிவிரா யுடலெலாம் வெளிற வொண்மணிக்
 களிகுலா மொருகுடை கவிந்த தென்பவே

(இ - ள்.) வெளிற்றுத் தன்மையில்லாதவனே? இன்றுநீ வெளிற்றுத் தன்மையைப் பொருந்துவாய் தெளியக்கடவாய் என்று உற்பாதங் காணப்பட்டாற்போல உடன் முழுதும் ஒளிகலந்து வெண்மை உளவாக ஒளியோடுகூடிய முத்தினாலாகிய களிப்புப் பொருந்திய ஒருகுடையானது கவிந்திருந்த தென்க.

(வி - ம்.) என்பதே, ஏ : அசைகள். உற்பனம் - உற்பாதம்; பின்வரும் தீமையை அறிவிக்கும் அடையாளம்.

(264)

 மானமா தமையிழப் பெய்தின் வாழ்தரா
 மானவேல் வீரரு நீங்க வாழ்கலார்
 ஆனசீ ராலின மென்ற டுத்தெனப்
 பானிலாக் கவரிகள் பாங்கிற் றுள்ளின.

(இ - ள்.) கவரிமா, தம்மை இழத்தலைப் பொருந்தின் உயிர்வாழ மாட்டா. அதுபோல வேற்படையுடைய வீரரும் மானம்நீங்க உயிர்வாழ மாட்டார்கள். இங்ஙன மொத்த சிறப்பால் இவர் தமக்கு இனம் என்று அடுத்தாற்போல வெண்சாமரங்கள் சூரன் பக்கலில் வந்து துள்ளின வென்க.

(வி - ம்.) கவரி - சாமரை. சாமரை, நம்மை யிழப்பின் உயிர் வாழாத மானமாப்போன்று இவ்வீரர் வீரத்தை யிழப்பின் உயிர்விடுவர். ஆதலால் நமக்கு இனமென்று கருதின என்க.

(265)

 வீரர்போ ரிடையுயிர் விளிந்த தானவர்
 வாரமா யமரரின் மருவக் கண்டிது
 சீரிதோ வெனச்சிர மசைத்தல் போன்றன
 ஓரும்வார் கொடிநிரை யுகந்த சைந்தவே.

(இ - ள்.) பூதவீரர் செய்த அமரின்கண்ணே உயிர்நீங்கப் பெற்ற அவுணர்கள் அன்புகொண்டு தேவர்களோடு பொருந்துதலைக் கண்ணுற்றுப் பகைவராகிய அவுணர் உறவு கொளுமிது சிறப்பாகுமா? வெனத் தலையை யசைத்தலைப் போல நீண்ட கொடி நிரைகள் உயர்ச்சியுற் றசைந்தன.

(வி - ம்.) ஓரும் : அசைநிலை. விளிந்த - இறந்த. வாரம் - அன்பு.

(266)

 எழுகட லோதையு மேழு மேகமும்
 குழுமுறு மோதையுங் கூர்ந்த சேனையின்
 விழுமிய வோதையும் வேறுந் தன்னெதிர்
 கெழுமுவ தரிதெனக் கிளர்ந்த தின்னியம்.