| (இ - ள்.) மகனாகிய பானுகோபன் தன் மனத்தின்கட் கருதிய வென்றியோடு வாராமையை யறிந்தவளவிற் சீற்றமிகுஞ் சூரனாகியவன் அழற்சியுற்று நாளையே யான் யாவரும் நடுக்கமுற்று இறக்க மூன்று கண்களையுடைய இறைவன் மகனை வெல்வேனென்று புழுக்க முற்றிருந்தன னென்க. (வி - ம்.) மதலை - மகன். கதம் - சினம். விதலை - துன்பம். வேறு - வெல்வேன். வேறு - தன்மை யொருமைமுற்று. விதலை - நடுக்கம். (260) | | அதுதெரிந் தாண்டகைச் சூரன் றோல்வியும் | | | விதுவணி பிரான்மகன் வெற்றி வீக்கமும் | | | புதுவது காணிய புகன்று வெய்யவன் | | | கதுமெனத் தேர்கடாய்க் கடலிற் றோன்றினான். |
(இ - ள்.) வெங்கதிர்க்கடவுள், இங்ஙனம் சூரன் எண்ணியதையறிந்து ஆண்டன்மையையுடைய சூரன் றோல்வியையும், வெண்கதிர்க் கடவுளைத் தரித்த இறைவன் றிருமதலையாகிய முருகனது வெற்றியின் பெருக்கத்தையும் புதுவதாகக் காணவிரும்பி விரைவாகத் தேரினைச் செலுத்திக் கடலின்கண்ணே தோன்றின னென்க. (வி - ம்.) விது - சந்திரன். புகற்சி - விருப்பம். (261) | | புலரியிற் செய்கடன் புரிந்து சூர்முதல் | | | உலவிறன் படைஞரை யொற்றிற் கூயினன் | | | விலகரு மிலக்கவெள் ளத்து வீரர்கள் | | | கலவின ரெழுகடன் முழக்கங் காட்டினார். |
(இ - ள்.) நாட்காலையில் செய்ய வேண்டியவைகளைச் செய்து சூரனாகிய முதல்வன் என்றுங் கெடுதலில்லாத தன் படையாளரைத் தூதர்களா லழைத்தனன். ஒருகாலத்தும் நீங்குதலில்லாத வெள்ளமென்னு மளவினையுடைய வீரர்களும் கலந்தவராகி கடல்போல முழக்கங் காட்டினா ரென்க. (வி - ம்.) புலரி - விடியற்காலம். உலவில் - கெடாத. கலவினர் - முற்றெச்சம். (262) | | மந்திரத் தலைவரு மற்று ளோர்களும் | | | தந்தியும் புரவியுந் ததைய வெவ்வகை | | | வெந்திறற் படைகளுந் தேரின் மேவுற | | | இந்திர ஞாலத்தே ரிவர்ந்து சென்றனன் |
(இ - ள்.) அமைச்சர்களும் ஏனையோர்களும் யானையுங் குதிரையும் நெருங்க எவ்விதப்பட்ட கொடிய வலிமையுள்ள படைகளும் தேரின்கண்ணே பொருந்தச் சூரனென்பான் இந்திரஞாலத் தேரின்மேலேறிச் சென்றன னென்க. (வி - ம்.) தந்தி - யானை. இந்திரஞாலம் - சூரன் தேர். (263) |