பக்கம் எண் :

திருநகரப் படலம்99

(இ - ள்.) எல்லாவற்றையும் தமதுண்மை ஞானத்தால் நுனித்தறிந்த சிவஞானிகளுக்காயினும் இந் நகரங்களின் வளங்களெல்லாவற்றினையும் சொல்லப்புகின் காலமிலவாகும். ஆதலினால், எழுவகைப் பட்ட பிரிவினுள்ளே குற்றமில்லாத பல பிறவிகள் எண்பத்துநான்கு நூறாயிர பேதமாகப் பொருந்தினாற் போலப் புறநகர் இடைநகர் உண்ணகராகிய மூவகைப் புரங்களின் வளங்கள் எண்ணிறந்தனவாய் நிற்கும். அவற்றுள்ளும் சிலவற்றை எடுத்துக்கொண்டு இவ்விடத்துச்
சொல்வாம்.

(வி - ம்.) எழுகூறு என்பது மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவற்றை யுணர்த்தும்.

(12)

வேறு

 அலங்குகதிர்ச் செழுஞ்சாலி கோழரையை
           மறைத்தலினா லலர்பூஞ் சோலைக்
 கிலங்குமணி மேகலையா மிணர்த்தபொழில்
           பாம்புரியோ டெழுந்த நொச்சி
 நலங்கிளரு மரைமறைத்து நிற்றலினா
           லதற்குடையா நாம விஞ்சி
 விலங்கலுயர் தடவரையை மறைத்தலினா
           லதற்குடையாய் விளங்கு மன்றே.

(இ - ள்.) அசைகின்ற கதிர்களோடு கூடிய நெற்பயிர்கள் கொழுவிய அரையை மறைத்தலினால், அலர்ந்த பூக்களோடு கூடிய சோலைக்கு விளங்குகின்ற அழகிய ஆடையாம். பூங்கொத்துக்களை யுடைய சோலையானது பாம்புரியோ டுயர்ந்த மதிலினது நன்மை விளங்குகின்ற அரையை மறைத்து நிற்றலினால் அதற்கு ஆடையாம். கண்டார்க்கு அச்சத்தைத் தரத்தக்க மதிலானது ஆகாயத்தைக் குறுக்கிட்டுயர்ந்த பெருமை பொருந்திய தணிகை மலையை மறைத்தலினாலே அத் தணிகை மலைக்கு ஆடையாக விளங்கும்.

(வி - ம்.) அலங்குதல் - அசைதல். "அலங்கு கதிர்க் கழனியும் பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே" என்னும் புறநானூற்றா னறிக. மேகலை - ஆடை. பாம்புரி - சுவரினடிப் பரப்பில் கழித்த பாகத்தை பாம்புரி என்பது பாண்டி நாட்டு வழக்கு. நொச்சி - மதில். நாம் என்ற உரிச்சொல் நாம என நின்றது; "பேநா முருமென வரூஉம் கிளவி, ஆமுறை மூன்றும் அச்சப் பொருள" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத் தானறிக. இஞ்சி - மதில். விலங்கல் - குறுக்கிடுதல். தடம் - பெருமை. "தடவும் கயவும் நளியும் பெருமை" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக.

(13)

 துன்றுகதிர்ப் பசுஞ்சாலி படிக்குயர
           வதற்குயர்ந்து சோலை தோன்ற
 மன்றல்கமழ் பொழிற்குயர்ந்து மதிறோன்றும்
           பெருங்காட்சி வள்ளி பாகன்