(இ - ள்.) மாட்சி நிறைந்த அழகோடு கூடிய புடை நகரானது, தன்னை அடுத்தவரது இளைப்பினைப் பூக்களையுடைய பெரிய சோலைகளால் கெடுத்தல் காரணமாக உருத்திர மூர்த்தியை யொக்கும். இடை நகரானது பொது மகளிர் தாம் பெற்ற பொருளளவுக் கேற்ப மறைத்துக் கொடுக்கின்ற இன்பத்தினிடத்து மீண்டும் பொருந்திய காதலுடைமையால் மகேசுரனை ஒக்கும். உண்ணகரானது, ஆண்டுள்ளவர்கள் விரும்பினவற்றை யெல்லாம் அனுபவிக்க அளித்துப் பொருந்துதலால் தலைவனாகிய +சதாசிவ மூர்த்தியை ஒக்கும். (வி - ம்.) அரன் கொள்ளி வட்டமும் காற்றாடியும்போல் மேலுங் கீழுமாகப் பிறப் பிறப்புக்களிற் செல்லும் ஆன்மாக்களை அழித்தல், இளைப்பாற்றலின் பொருட்டாம். அதுபோலப் புடை நகரும் தொழின் முயற்சி காரணமாக உண்ணகர் முதலியவற்றின்கட் சென்று களைத்து வரும் மாந்தர்களின் களையை நீக்கி யிளைப்பாறப் புடைநகர் சோலைகளாற் செய்தலின் "அரன்போலு" மென்றார். மகேசுரன் ஆன்மாக்களின் பக்குவத்திற் கேற்ப மறைத்தல் செய்து பின்னரு மின்பத் தொடர்ச்சி யுளதாதற்குரிய காதலுடைமையைச் செய்தல்போல இடைநகர், பதியிலார் ஆடவர் மாட்டுப் பொருளளவுக் கேற்ப இன்பத்தை மறைத்து நல்கி மீண்டு மவ்வின்பத்திற் காதலுளவா மாற்றிற் கேதுவா யிருத்தலான் "இடை நகரீசனைத் துணையும்" என்றார். சதாசிவப் புத்தேள் தம்மையடைந்த ஆன்மாக்கள் விரும்பிய புத்தி முத்திகளைக் கொடுத்தல் போல உண்ணகரானது அப்போக நுகர்ச்சிக் கேதுவாகிய அறிவின் விளக்கமும் வீட்டு நெறிக் கேதுவாகிய தத்துவ வுணர்ச்சியையும் உடைய பெரியார் பலரிருந்து தம்மை யடைந்த மக்களுக்குப் புத்தி முத்திகளை யுபதேசித்தலின் உண்ணகர் சதாசிவக் கொற்றவன்றனை நேருமென்றார். அழித்தலால் உருத்திரனையும், மறைத்தலான் மகேசுரனையும், அனுக்கிரகம் செய்தலான் சதாசிவனையும் இந் நகரங்கள் ஒத்தன என்க. "அழிப்பிளைப் பாற்ற லாக்கல் அவ்வவர் கருமமெல்லாம் கழித்திட னுகரச் செய்தல்" என்னுஞ் சிவஞான சித்தித் திருவிருத்தத்தா னறிக. அனுக்கல் - கெடுத்தல். மறைத்து நல்கிடு மின்பந் தொடுத்த லாவது, மறைத்துப் பின் இன்பத் தொடர்ச்சியை யுண்டாக்கும் காதலுடைமை. (11) | முழுது ணர்ந்தநித் தியர்தமக் காயினு | | முழுவதுஞ் சொலப்புக்கால் | | பொழுதின் றாய்விடு மாதலின் மூவகைப் | | புரவள மெழுகூற்றில் | | பழுதில் பல்பவ மெண்பத்து நான்குநூ | | றாயிரம் பட்டாங்குக் | | குழுமி நின்றிடு மவற்றுளுஞ் சிலவினிக் | | கொண்டிவ ணுரைப்பாமால். |
|