பக்கம் எண் :

திருநகரப் படலம்97

அசுத்த தத்துவம் - ஆன்ம தத்துவமாகிய இருபத்து நான்கு. சுத்தா சுத்த தத்துவமாவன - வித்யா தத்துவ மேழு. சுத்தம் - சிவ தத்துவமாகிய ஐந்து. இவற்றைச் சிவஞான சித்தியாரிற் காண்க.

(9)

 ஆய பல்படை யாதிக ளாக்கலிற்
           புடைநக ரயன்போலும்
 மாய மென்மொழி மயக்கியா டவர்துனி
           மாதரை யுயிர்காத்து
 மேய போகங்கள் விளைத்தலி னிடைநகர்
           விண்டுவொத் திடுமுற்றோர்க்
 கோய வின்னல்க ளறன்கடை துடைத்தலி
           னுண்ணக ரரனேரும்.

(இ - ள்.) புடைநகரமானது அழகிய வேற்படை முதலிய படைக்கலன்களை யுளவாக்கலினாலே, பிரமனை யொக்கும். இடை நகரமானது வஞ்சகத்தோடு கூடிய மெல்லிய இன்சொற்களால் மயக்குதலைச் செய்து அவ் வாடவரோடு சிறுகலாத்தை விளைக்கின்ற மாதர்கள் உயிர்களைக் காத்தல் செய்து (அவ்வவர் கருமத்துக் கீடாக) பொருந்திய போகங்களை யுளவாக்கலினால் விண்டுவை யொக்கும். உண்ணகரானது தன்னையடைந்தோர்க்கு இன்னல்கள் நீங்க அக் குற்றங்களை நீக்கலின் உருத்திரனை யொக்கும்.

(வி - ம்.) மகதக் கொல்லரும் மராட்டத் தச்சரு முதலாகிய பணித்தொழிலாளர் புடை நகரின்கட் டங்கிக், கைவிடாப்படை கைவிடும்படை முதலிய படைகளும், தோற்கருவி, துளைக்கருவி முதலிய பல கருவிகளையும், புதிது புதிதாக ஆக்கலின் அயன்போலு மென்றார். அற்றைப் பரிசம் கொள்வாராகிய பதியிலார், இடை நகரின்கட் டங்கித் தம்பால் வந்த ஆடவரை வஞ்சக மொழியால் மயக்கி அவர்கள் முலை விலையாகத் தரும் பொருளுக் கேற்பப் போகங்களை யளந்து கொடுத்தலின் விண்டு ஒத்தது என்றார். அந்தணர் அருந்தவத்தோர் முதலாய சான்றோர் உண்ணகரின்கட் டங்கித் தம்மையடைந்தோர்க் குளவாகிய குற்றங்களைச் சிவாகம விதியால் கழுவாய் செய்து புனிதப்படுத்தலின் அரனேரும் என்றார். அறன்கடை, அறத்தின் இழிந்தது எனப் பொருள் பட்டுக் குற்றங்களைக் குறித்தது.

(10)

 அடுத்து ளோரிளைப் பலர்கயப் பொழில்களா
           லனுக்கலா லரன்போலும்
 மடுத்த மாணெழிற் புடைநகர் மாதரார்
           மறைத்துநல் கிடுமின்பம்
 தொடுத்த காதலி னிடைநக ரீசனைத்
           துணையும்வேட் டனதுய்ப்பக்
 கொடுத்து மேவலி னுண்ணகர் சதாசிவக்
           கொற்றவன் றனைநேரும்.