பக்கம் எண் :

100திருவரங்கத்தந்தாதி

மலும் சுழலுதலை ஒப்புமைகூறினார்; உவமையணி. தேவர்கட்குப் பகைவனாய் அவர்களை வென்றுஅடக்கிய மாவலியைச் செருக்கடக்குதற்குத் திருமால் திரிவிக்கிரமனாய் வளர்ந்த சமயத்தில் அதுகண்ட களிப்பினால் தேவர்கள் மேலுலகத்தினின்று மலர்மாரிசொரிந்தன ரென்க.

"இறைமுறையான் சேவடிமேன் மண்ணளந்த வந்நாள், மறைமுறை யால் வானாடர் கூடி - முறைமுறையின், தாதிலகு பூத்தெளித்தா லொவ்வாதே தாழ்விசும்பின், மீதிலகித் தான்கிடக்கும் மீன்" என்ற ஆழ்வாரருளிச் செயலை அடியொற்றியது, இச்செய்யுள்.

கண் அம்புயம்போல் அரங்கன் - புண்டரீகாக்ஷன். எல்லாவுலகங்கட் குங் கீழே எம்பெருமான் ஆதிகூர்மரூபியாயிருந்துகொண்டு அவற்றையெல் லாந் தாங்குதலும், பிரளயகாலத்தில் அனைத்துலகத்தையும் வயிற்றில் வைத்திருத்தலும், பகவானதுதிவ்வியசக்தியின் உதவியினாலன்றி யாதொரு பொருளும் எங்கும் நிலைபெறாமையும் பற்றி, "தலமேழுக்கும் ஆதாரா" என்றார். திருக்கண்ணமங்கை - சோழநாட்டுத் திருப்பதிகளி லொன்று. உம்பர் - இடவாகுபெயர். மலர் - பால்பகாஅஃறிணைப்பெயர்; இங்குப் பன்மையின் மேலது. வீழ்தாரா, நில்லா - எதிர்மறைப் பலவின்பால் முற்றுக்கள் எச்சமாய் நின்றன; ஆதலால், "அல்வழி ஆ மா மியா முற்று முன்மிகா" என்றபடி இவற்றின்முன் வலி இயல்பாயிற்று. வீழ்தாரா = வீழா; தா - துணைவினை, ர் - விரித்தல். தாராகணம் - வடமொழித்தொடர்.

(77)

78.தானந்தியாகந்தவங்கல்விதீர்த்தந்தழலிலவி
தானந்தியாகந்தருமிழிபாயினதண்ணரங்கத்
தானந்தியாகப்பகன்மறைத்தான்பெயர்தந்திடும்வே
தானந்தியாகண்டலனறியாப்பரந்தாமத்தையே.

(இ - ள்.) தானம் - தானஞ்செய்தலும், தியாகம் - தியாகமளித்தலும், தவம் - தவஞ்செய்தலும், கல்வி - நூல்களையோதுதலும், தீர்த்தம் - புண்ணியதீர்த்தங்களில் நீராடுதலும், தழலில் அவி நந்து யாகம் - அக்கினியிலே ஹவிஸ் பக்குவமாகப்பெறுகின்ற யாகமும், (என்னும் இவையெல்லாம்) இழிபு ஆயின தரும் - இழிவான பதவிகளையே (தம்மையுடையார்க்குக்) கொடுக்கும்; அந்தி ஆக பகல் மறைத்தான் - மாலைப்பொழுது உண்டாம்படி சூரியனை (ச் சக்கரத்தால்) மறைத்தவனான, தண் அரங்கத்தான் - குளிர்ந்த திருவரங்கநகருடையானது, பெயர் - திருநாமமோ, வேதா நந்தி ஆகண்டலன் அறியா பரந்தாமத்தை தந்திடும் - (தன்னைக்கருதினவர்க்குப்) பிரமனும் சிவனும் இந்திரனும் அறியமாட்டாத பரமபதத்தைக் கொடுத்திடும்) (எ - று.) - இரண்டாமடியில், தான் - அசை.

ஆதலால், அவன் திருநாமத்தைக் கூறிப் பரமபதமடையுங்க ளென்பது, குறிப்பு. நற்கதிபெறுதற்குஉரிய உபாயமென்று கொள்ளப்படுகிற தானம் முதலிய அனைத்தினும் பகவந்நாமஸ்மரணத்துக்கு உள்ள மகிமையை வெளி யிட்டார். மற்றவையெல்லாம், அழியுந்தன்மையனவான இழிந்த இந்திரன் முதலிய இறையவர்பதங்களையே கொடுக்கமாட்டும்; நாமஸ்மரணமோ, அந் தமிலின்பத்துஅழிவில்வீட்டைத் தரும் என வேறுபாடு விளக்கப்பட்டது.