பக்கம் எண் :

திருவரங்கத்துமாலை145

6.பாற்கடனாலெட்டிலக்கமியோசனை பாற்கடலுண்
மாற்கவிகோயிலகலமுமீரைந்து வானளவுந்
தீற்கமொரேழு திகழ்பணிமூன்று சிறந்தகல
மேற்கவினொன்றரை யுத்தமர்நீளமிரண்டரையே.

(இ - ள்.) பால் கடல் - திருப்பாற்கடலினது, (நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை - முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனையாம்; பால் கடலுள் - அந்தத் திருப்பாற்கடலினிடையே, மால் கவி கோயில் - திருமாலை வளைந்துகொண்டிருக்கின்ற திருக்கோயிலினது, அகலமும் -, ஈர்ஐந்து (இலக்கம் யோசனை) - பத்துலக்ஷம் யோஜனையாம்; வான் அளவும் தீற்கம் - ஆகாயத்தை யளாவுகின்ற (அத்திருக்கோயிலின்) உயரம், ஒர் ஏழு (இலக்கம் யோசனை) - ஏழுலக்ஷம் யோஜனையாம்; திகழ் பணி - விளங்குகின்ற திரு வனந்தாழ்வானது, (நீளம்) -. மூன்று (இலக்கம் யோசனை) - மூன்றுலக்ஷம் யோஜனையாம்; சிறந்த அகலம் - மேன்மையுற்ற (அத்திருவனந்தாழ்வானது) அகலம், ஏல் கவின் ஒன்றுஅரை (இலக்கம் யோசனை) - பொருந்திய அழகையுடைய ஒன்றரைலக்ஷம் யோஜனையாம்; உத்தமர் - (அதிற்பள்ளி கொண்டருள்கின்ற) புருஷோத்தமரான எம்பெருமானுடைய, நீளம் - (திருமேனியின்) நீட்சி, இரண்டரை (இலக்கம் யோசனை) - இரண்டரைலக்ஷம் யோஜனையாம்; (எ - று.)

"அகலம்" "தீற்கம்" என்ற சொற்க ளில்லாத இடங்கட்கெல்லாம், "நீளம்" என்பது, தகுதிபற்றி, முந்தினசெய்யுளிற்போல எடுத்துக்கூட்டப் பட்டது. "தீற்கம்" என்பதை "பாற்கடல்," "பணி" என்றவற்றோடுங்கூட்டி, அதற்கு அவ்விடங்களில் நீளமென்று பொருள் கொள்ளுதலுமாம். "இலக்கம்," "யோசனை" என்ற சொற்கள் எடுத்து எல்லா வாக்கியங்களிலுங் கூட்டப் பட்டன; முதனிலைத்தீவகம். "பாற்கடல் நாலெட்டிலக்கமியோசனை, "திகழ் பணி மூன்று," "உத்தமர்நீள மிரண்டரை" என்ற மூன்று விஷயங்கள் கீழ்ச் செய்யுளிற் கூறியனவே யானாலும், "பாற்கடலுள்மாற்கவிகோயிலகலமு மீரைந்து," "வானளவுந்தீற்க மொரேழு", "சிறந்தகல மேற்கவினொன்றரை" என்ற மூன்றுவிஷயங்கள் புதியன வாதலால், இச்செய்யுள் கூறியதுகூற லென்னுங் குற்றத்தின்பாற்படா தென்க. முன்சொன்ன மூன்று விஷயங்களை இங்கு மீளவுஞ்சொன்னது, அவற்றைச்சார்ந்த விஷயங்களனைத்தையும் ஒருங்கே தொகுத்துணர்த்தவேண்டு மென்னுங் கருத்தினா லென்க; "கூறியது கூறினுங் குற்றமில்லை, வேறொரு பொருளை விளைக்கு மாயின்" என்பது காண்க. வெவ்வேறு நூல்களிற் கூறியவற்றின் மொழிபெயர்ப்பாக இங்ஙனம் தனித்தனி கூறினர்போலும்.

மால் - பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றை யுடையவன்; தன்னையடைந்தவர்க்குத் தன்பக்கல் மோகத்தை விளைப்பவ னென்றும் பொருள்கொள்ளலாம். மாற் கவி - இரண்டாம்வேற்றுமைத்தொகை யாதலின், உயர்திணைப்பெயரீறு திரிந்தது, "இயல்பின் விகாரம்", உம்மை - எச்சப்பொருளது, ஈரைந்து - பண்புத்தொ