தீவினைகாள் - பாவங்களே! - ஓங்காரம் வட்டத்து - பிரணவாகார விமான த்துள், மாசுணம் பாயில் - ஆதிசேஷனாகிய சயனத்தில், உலோகம் உண்ட - லோகங்களை வயிற்றில் வைத்தருளிய, பூ கார் - அழகிய காளமேகம், விழிக்கு - (எனது) கண்களுக்கு, புலப்பட்டது - விளங்கிற்று; ஆல் - ஆதலால், இனி -, நீரும் - நீங்களெல்லாரும், நின்று நின்று தேங்காது - இங்கு நிரைந்து நிற்காமல், அ கானிடத்தே - அந்தக் காட்டினிடத்தே, சென்று சேர்மின்கள் - போய்ச் சேருங்கள்; (எ - று.) இதுவரையில் நீங்கள் என்னைத் துன்பப்படுத்தியது போல எம்பெரு மான்திருவருளுக்கு இலக்கான என்னை இனிப் படுத்தமுடியா தென்று தீவினைகளை ஒறுத்தன ரென்பதாம். "நெய்க்குடத்தைப்பற்றியேறுமெறும்பு கள்போல் நிரந்துஎங்குங், கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம்பெற வுய்யப்போமின், மெய்க்கொண்டுவந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்" என்ற திருப்பதிகத்தை அடியொற்றியது இச்செய்யுள், வட்டம், கார் - ஆகு பெயர்கள். அக்கான் - சேர்தற்கரிய காடு என்றபடி. இங்குக் கேளாத தீவினைகள் கேட்பதுபோலச் சொல்லப்பட்டன; மரபுவழுவமைதி. (102.) 103. | விண்ணிட்டசோலையரங்கத்துமேவியமெய்ப்பொருளைக் | | கண்ணிட்டபார்வையிற்கட்டியென்கண்வரக்கண்டுடலாம் | | புண்ணிட்டவண்ணக்கிழியுட்பொதிந்துபுறத்துவெள்ளை | | மண்ணிட்டிலச்சினையிட்டுவிள்ளாதுள்ளம்வைத்தனனே. | (இ - ள்.) விண் இட்ட சோலை - ஆகாயத்தை யளாவிய சோலைகளை யுடைய, அரங்கத்து - திருவரங்கத்தில், மேவிய - விரும்பி யெழுந்தருளியி ருக்கின்ற, மெய் பொருளை - பரதத்துவத்தை, என்கண் வர கண்டு - என்னிடத்தே வரப் பார்த்து, கண் இட்ட பார்வையின் - கண்வைத்த பார்வையினால், கட்டி -, புண் இட்ட - ஊன் பொருந்திய, உடல் ஆம் - சரீரமாகிய, வண்ணம் கிழியுள் - அழகிய சீலையுள்ளே, பொதிந்து - வைத்துமூடி, புறத்து - வெளியே, வெள்ளை மண் இட்டு - வெண்மையாகிய மண்ணை அப்பி, இலச்சினை இட்டு - முத்திரைவைத்து, விள்ளாது - விட்டு நீங்காதபடி, உள்ளம் - மனத்திலே, வைத்தனென் - வைத்திட்டேன்; (எ - று.) கட்டிப்பொன்கிடைத்தால் அதனைக் கட்டிக்கொணர்ந்து கிழியில்வை த்துப் பத்திரப்படுத்தி நம்முடையதென்றுதெரிவித்தற்காக அக்கிழியின்வெளியில் மண்ணை யப்பி முத்திரைவைக்கின்ற இயல்பை மனத்திற்கொண்டு இவ்வாறு கூறினர். ஸ்ரீரங்கத்து எம்பெருமானைப் பொற்கட்டியாகவும், அவர்தமக்குச்சேவைசாதித்ததை அப்பொன் காணக்கிடைத்ததாகவும், தாம் கண்ணாரச்சேவித்துத் தன்மனத்தே பதியவைத்ததனை அப்பொற்கட்டியைக் கட்டிக்கொணர்ந்து பொற்கிழியிலே பத்திரப்படுத்தியதாகவும், அப்பெருமான் எழுந்தருளியுள்ள உடலின்மேற்புறத்தில் தான் திருமண்காப்புத்தரித்தலைப் பொற்கிழியின்மேல் மண்ணை அப்பியதாகவும், தாம்திருவிலச்சினை தரிப்பதை முத்திரை வைப்பதாகவும், உருவகஞ்செய்தன ரென்க: இது, ஸாவயவரூபகவணியாகும். "உன்னைக்கொண்டென்னுள்வைத்தேன்" என் |