றார்ஆழ்வாரும். திருவரங்கநாதனை 'மெய்ப்பொருள்' என்றதற்கேற்ப இவ்வாறு கூறினார். மெய்ப்பொருள் - நிலையாகிய செல்வம், பரம்பொருள். பார்வையின் - பார்வையாகிய கயிற்றால். கிழி - நிதிவைக்குஞ் சீலை வண்ணக்கிழி - வர்ணச்சீலை யென்றுமாம். வெள்ளைமண்இடுதல் - திருமண்காப்பிடுதல் (புண்டரம்); இலச்சினையிடுதல் - தோள்களிற் சங்க சக்ர சின்னந் தரித்தல் (ஸமாஸ்ரயணம்) என்கண் - என் கண்ணினிடத்தே யென்றுமாம். (103) 104. | கைத்துப்பழவினை தித்திக்கவென்றன்கருத்தினுள்ளே | | பைத்துத்திமெத்தையின் மீதேதுயிலும் பைங்கேழெறிந்து | | மைத்துக்குளிர்ந்துமதுரித்துமெத்தென்றுமாமணத்து | | நெய்த்துப்புகர்த்துநிகர்க்கும்பொன்மேனி நெடுங்கடலே. | (இ - ள்.) பைங் கேழ் எறிந்து - பசிய ஒளியை வீசி, மைத்து - கறுத்து, குளிர்ந்து -, மதுரித்து - இனியதாகி, மெத்தென்று - மிருதுவாய், மா மணத்து - மிக்கவாசனைவீசப்பெற்று, நெய்த்து - பளபளப்புக்கொண்டு, புகர்த்து - கபிலநிறமுடையதாய், நிகர்க்கும் - (இத்தன்மையெல்லாம்) ஒத்திருக்கின்ற, பொன் - பொன்போன்ற, மேனி - திருமேனியையுடைய, நெடுங்கடல் - பெரிய கடல் (நம்பெருமாள்), பழ வினை கைத்து - பழைய இருவினைகளைப்போக்கி, என்தன் கருத்தினுள்ளே - எனதுமனத்திலே, தித்திக்க - இனிக்கும்படி, பை துத்தி மெத்தையின்மீதே - படங்களையும் புள்ளிகளையுமுடைய (திருவனந்தாழ்வானாகிய) சயனத்தின்மேலே, துயிலும் - யோகநித்திரைசெய்தருள்வர்; (எ - று.) "ஸர்வகந்தஸ்ஸர்வரஸ:" என்றபடி எம்பெருமான் எனக்கு எவ்விதத்திலும் இனிமைதருபவ னென்று கருத்து. தாம் அழகியமணவாளனை ஸ்ரீரங்கத்திலே கண்டு ஸேவித்து ஆட்பட்டது முதல் அப்பெருமான் ஐயங்காருடைய மனத்தி லெழுந்தருளியிருத்தலினால் 'என்றன் கருத்தினுள்ளே பொன்மேனி நெடுங்கடல் துயிலும்' என்றார் எனினுமாம்; "பனிக்கடலுட் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என், மனக்கடலுள் வாழவல்ல மாய மணாள நம்பீ" என்றார் பெரியாழ்வாரும்: 'உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைகதேஸத்திலே பண்ணும்; அங்குத்தை வாஸம் ஸாதநம், இங்குத்தை வாஸம் ஸாத்யம்' என்ற ஸ்ரீவசநபூஷணமும் கருதத்தக்கது. கைத்தல் - கோபித்தல்; இங்கு, காரியத்தைக் காரணமாக உபசரித்தார். நெய்த்து - செழித்து, அல்லது வழுவழுத்து என்றுமாம். மேனியாகிய கடலென்றுமாம். இனி, நிகர்க்கும் என்பதனை முற்றாகவுங் கொள்ளலாம். (104) (கருடஸேவை.) 105. | தெள்ளாவரும் பொன்னிசூழரங்கா வொருதேவரையு | | முள்ளாதெனதுள்ளம்யானென்செய்வேன் விண்ணிலோருவணப் | | புள்ளாகிவேதப்பொருளாகியுன்னைத்தன்பொற்கழுத்திற் | | கொள்ளாவருகின்றகோலமுள்ளேகண்டுகொண்டபின்னே. | |