தந்தார்; அதுபோல, பிற்காலத்தில் அழகியமணவாளதாசரோ தாழ்வாரும் எம்போலியர்க்கு ஏற்பத் தமிழ்மறைகளின் சாரமாக விசித்திரமான கவ னங்களைக்கொண்ட திருவரங்கக்கலம்பகத்தைச் செய்தருளினா ரென்பதாம். இது, எடுத்துக்காட்டுவமையணி; இதனை வடநூலார் திருஷ்டாந்தாலங்கார மென்பர். தாழ்வாவது - பகவத்கதை சிறிதுமில்லாத நூல்களாற் பொழுது போக்குகை. ஸ்ரீமந்நாதமுனிகள் முதலானார் தாழ்வியாதுமில் குரவ ராதலால், தம்மை 'தாழ்வாரு மெம்போலியர்' என்றார். போதம் நல்குதல் - கல்வியாலாகிய அறிவோடு உண்மையறிவையும் உதவுதல். 'முன்' என வந்ததனால், "பின்" என வருவிக்கப்பட்டது. உபமேயவாக்கியத்திலுள்ள 'போதநல்க' 'இரங்கி' என்பவை - உபமான வாக்கியத்திலும், 'தமிழால்' என்பது, - உபமேய வாக்கியத்திலுங் கூட்டப்பட்டன. அழகிய மணவாள ரென்னும் நம்பெருமாள் பெயரைக் கவிக்கு இட்டு வழங்கியது, ஆகுபெயர். "எம்" என்பது - தனித்தன்மைப்பன்மை. "போலி யர்க்கும்" என்ற உம்மை - இழிவுசிறப்பு; அது, சின்னாட் பல்பிணிச் சிற்றறி வுடைய சிறியேமென்ற இழிவுப்பொருளுணர்த்திற்று. "போதம்" - வட சொல். காண் - முன்னிலையசை; தேற்றப்பொருளதாகவுமாம். இது, இருவிகற்பத்தால் வந்து நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த நேரிசைவெண்பா. "மணவாளர்" எனவே ஆக்கியோன்பெயரும், "ஆழ்வார் முன் பின்ன வர்க்கு மாமறை தந்தார்" என்னும் உபமானத்தால் அத்திவ்வியப்பிரபந்தங்களின் சாரமிதுவென வழியும், "தமிழால்" எனவே அத்தமிழினது எல்லையாகிய கீழ்கடல் தென்குமரி மேல்கடல் வடவேங்கடமாகிய எல்லையும், "அரங்கக்கலம்பகம்" எனவே நூற்பெயரும், நுதலியபொருளும், "எம்போலியர்" எனவே கேட்போரும், "போதநல்க" எனவே பயனும், "இரங்கி" எனவே காரணமும் பெறப்பட்டன; மற்றையவற்றுட் குறிப்பிக்கப்படுவன உய்த்துணர்ந்து கொள்க. இக்கவி, அபியுக்தரில் ஒருவர் செய்தது; இது, ஸ்ரீவைஷ்ணவசம்பிராத யத்தில் தனியனெனப்படும்: (நூலினுட் சேராது) தனியே பாயிரமாக நிற்றல்பற்றியது, அப்பெயர். உயர்திணையாண்பால்விகுதி சிறுபான்மை அஃறிணைக்கும் வருதலை, கடுவன் கோட்டான் தோளுக்கினியான் என்ற விடங்களிற் காண்க; நாலடியார் சிவஞானசித்தியார் என்ற இடங்களில் "ஆர்" விகுதிபோல இங்கு "அன்" விகுதி உயர்வு குறிப்பதென்றலுமாம். மேலிற்கவியும் இவ்வாறே. (1) சொன்னோக்கும் பொருணோக்குந் தொடைநோக்கு நடை நோக்குந் துறையி னோக்கோ,டெந்நோக்குங் காண விலக்கியமாவ தன்றி யிதிலீடுபட்டோர்,நன்னோக்கும் புத்தியும் பத்தியும் பெறுவர் முத்தியுண்டா நானென் சொல்கேன்,பன்னோக்கு மணவாளர் பகரரங்கக்கலம்பகத்தைப் பாரீர் பாரீர். |