த்தினமயமான மண்டபம்; இது, அந்தமில் பேரின்பத்தையுடைய நித்திய விபூதியாகிய பரமபதத்தி லுள்ளது. "தற்கச்சமணருஞ் சாக்கியப் பேய்களுந் தாழ்சடையோன், சொற் கற்ற சோம்பருஞ் சூனியவாதரு நான்மறையும், நிற்கக் குறும்புநெய்நீசரு மாண்டனர் நீணிலத்தே, பொற்கற்பகம் எம் மிராமாநுசமுனி போந்தபின்னே", "சாருவாகமத நீறுசெய்து சமணர் செடிக்கனல் கொளுத்தியே சாக்கியக்கடலை வற்றுவித்து மிகுசாங்கியக்கிரிமுறித்திட, மாறுசெய்திடு கணாதவாதியர்கள் வாய்தகர்த்தற மிகுத்துவேல் வந்தபாசுபதர் சிந்தியோடும் வகை வாதுசெய்த வெதிராசனார், கூறுமா குருமதத்தொ டோங்கிய குமாரி லன் மதமவற்றின்மேல் கொடியதர்க்கசரம் விட்டபின் குறுகிமாய வாதி யரை வென்றிட, மீறிவாதில் வரு பாற்கரன் மதவிலக்கடிக் கொடியெறிந்து போய் மிக்கயாதவமதத்தை மாய்த்தபெருவீரர்நாளுமிகவாழியே" என்னும் பெரியார் பாசுரங்கள் முன்னிரண்டடிக்கு மேறே்காளாகத்தக்கன. (3) பட்டர்துதி. | வானிட்டகீர்த்திவளர்கூரத்தாழ்வான்மகிழவந்த | | தேனிட்டதார்நம்பெருமாள்குமாரர்சிவனையயன் | | றானிட்டசாபந்துடைத்தாளரங்கர்சங்காழிபுய | | நானிட்டனென்றருள்பட்டர்பொற்றாள்கதிநந்தமக்கே. | (இ - ள்.) வான் இட்ட - தேவலோகத்திலும் பரவிய, கீர்த்தி - புகழா னது, வளர் - (மேன்மேல் மிக்கு) வளரப்பெற்ற, கூரத்தாழ்வான் - கூரத் தாழ்வானென்னும் ஆசாரியர், மகிழ - திருவுள்ளமுவக்கும்படி, வந்த - (அவரது திருக்குமாரராய்த்) திருவவதரித்த, தேன் இட்ட தார் - தேன் துளிக்கின்ற மாலையையுடைய, நம்பெருமான் - திருவரங்கநாதரது, குமாரர் - திருக்குமாரரும், - சிவனை - சிவனுக்கு, அயன் - பிரமன், இட்ட - கொ டுத்த, சாபம் - சாபத்தை, துடைத்து - போக்கி, ஆள் - காத்தருளிய, அரங்கர் - ரங்கநாதரது (சின்னமாகிய), சங்கு ஆழி - சங்க சக்கரங்களை, புயம் - (என்னுடைய) தோள்களில், நான் இட்டன் என்று - அடியேனையும் ஒரு அன்பனாகக்கொண்டு, அருள் - (திருவிலச்சினையிட்டு) அருளியவருமான, பட்டர் - ஸ்ரீபராசரபட்டரது, பொன் தாள் - அழகிய திருவடிகள், நந்தமக்கு - நமக்கு, கதி - அடைக்கலமாகும்; (எ - று.) சங்கசக்கரங்களாகிய திருவிலச்சினையை அடியேனுக்குப் பிரசாதித்த ஸ்ரீபராசரபட்டரது திருவடித்தாமரைகளே அடியேனுக்குத் தஞ்ச மென்பதாம். இங்குத் திருவிலச்சினையாகிய தாபத்தைக் கூறியது - புண்ட்ரம் நாமம் மந்த்ரம் திருவாராதநம் என்னும் மற்றை ஸம்ஸ்காரங்கட்கும் உபலக்ஷணம். "ஞானமனுட்டானமிவை நன்றாகவேயுடைய னான குருவை யடைந்தக் கால் - மானிலத்தீர், தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், தானேவைகுந் தந்தரும்" என்ப வாதலால், இவ்வாறுகூறினரென்க. கீர்த்தி வானுலகத்திற் பரவியமை கூறவே, இவ்வுலகத்துப் பரவியமை தானே பெறப்படும். கூரத்தாழ்வான் - கூரமென்னும் ஊரில் திருவவதரித்தவர். வந்த பட்டர், குமாரராகிய பட்டர், அருள் பட்டர் என இயையும். தேனிட்ட தார் - |