(இ - ள்.) கொடி ஆடும் - துவசங்கள் அசைகின்ற, மணி மாடம் - இரத்தினங்களிழைத்த மாளிகைகளையுடைய, அயோத்தி முதுஊர் - திருவயோத்தியென்கிற பழையநகரத்தில், குடி - தங்குதலை, துறந்து - விட்டு, திருவரங்கம் - ஸ்ரீரங்கத்தை, கோயில்கொண்ட - இருப்பிடமாகக்கொண்டு எழுந்தருளியிருக்கின்ற, நெடியோனே - பெரியோனே! - வடியாத பவம் கடலும் - வற்றிப்போகாத பிறவிப்பெருங்கடலும், வடிந்து - வற்றப்பெற்று, மூல மாயை கடந்து - மூலப்பிரகிருதியைத் தாண்டி, அப்பால் போய் - அதற்கப்புறஞ் சென்று, வைகுந்தம் சேர்ந்து - ஸ்ரீவைகுண்ட மடைந்து, அடியார்கள் குழாம் கூடி - தொண்டர்களது கூட்டத்தோடு சேர்ந்து, உனது அடிக்கீழ் - உன்னுடைய திருவடியின்கீழ், அடிமை செயும் - கைங்கரியஞ் செய்திருக்கின்ற, அக்காலம் -, எக்காலந்தான் - எப்பொழுதோ? அடியேன் - (உனது) அடியவனும், நீசனேன் - கடைப்பட்டவனுமாகிய, நான் -, முயற்சி இன்றி - பிரயத்தனஞ் சிறிது மில்லாமல், நின் அருளே - உனது திருவருளையே, பார்த்திருப்பன் - எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; (எ - று.) எம்பெருமானது திருவருணோக்கம் பதிதலால் இருவினைகள் நீங்கி அவைகாரணமாகத்தோன்றும் பிறவியற, பின்பு இந்தப்பிரகிருதிமண்டலத்தைக் கடந்துபோய் ஸ்ரீவைகுண்டமாநகரில் அடியார்கள் குழாங்களுடன் சேர்ந்து எம்பெருமானுக்குத்திருத்தொண்டுபுரியவேண்டுங்காலம்எப்போது கிட்டுமோ? என்று அக்காலத்தைப்பார்த்திருக் கின்றனரென்க. "அடியார் குழாங்களையுடன் கூடுவதென்றுகொலோ," "என்றுகொல் சேர்வதந்தோ அரன் நான்முக னேத்துஞ் செய்யநின்திருப்பாதத்தை" என்றார் நம்மாழ்வாரும். சூரியகுலத்துத்தோன்றிய இக்ஷ்வாகுசக்கரவர்த்தி பிரமதேவனைக் குறித்துப் பலநாள் பெருந்தவஞ்செய்ய, அப்பிரமன் அத்தவத்திற்கு மகிழ்ந்து தான்பலகாலமாய் ஆராதித்துவந்த எம்பெருமானை விமானத்துடன் பிரசாதித்தருள, திருவயோத்தி சேர்ந்து அவ்விக்ஷ்வாகுவினாலும் பின்னுள்ள அக்குலத்தரசர்களாலுந் திருவாராதநஞ் செய்யப்பட்டுவந்த நம்பெருமாள், ஸ்ரீராமபிரானால் இராவணவதம்முடிந்து திருவபிடேகம்செய்துகொண்டகாலத்தில் விபீஷணாழ்வானுக்குக் கொடுத்தருளப்பட்டுத் திருவரங்கஞ் சேர்ந்ததனால், "அயோத்திமூதூர் குடிதுறந்து திருவரங்கங் கோயில்கொண்ட நெடியோன்" என்றார். இதற்குச் செய்யுளிலக்கணம் 15 - ஆங் கவியிற் கூறியதே. (93) | நீசச்சமணர்க்குஞ்சூனியவாதர்க்குநீதியற்ற | | பூசற்பவுத்தர்க்குஞ்சைவர்க்கும்யார்க்கும்புகலுகின்றே | | னாசப்படாவுயிரெல்லாமுதற்றந்தநாதன்கண்டீ | | ராசற்றசீரரங்கத்தாதிமூலத்தரும்பொருளே. | (இ - ள்.) நீசம் சமணர்க்கும் சூனியவாதர்க்கும் - கீழ்மையையுடைய சமணர்களுக்கும் நாஸ்திகவாதிகளுக்கும், நீதி அற்ற பூசல் பவுத்தர்க்கும் சைவர்க்கும் - நியாயமல்லாத வாதஞ்செய்கிற பௌத்தர்களுக்கும் சைவர்களுக்கும், யார்க்கும் - மற்றைப் புறச்சமயத்தவர் யாவர்க்கும், புகலுகின் |