றேன் - சொல்லுகின்றேன்; - நாசம் படா உயிர் எல்லாம் - அழிவில்லாத சீவன்களையெல்லாம், முதல் தந்த - ஆதியிற் படைத்த, நாதன் - தலைவன், ஆசு அற்ற - குற்றமில்லாத, சீர் அரங்கத்து - ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளி யிருக்கின்ற, ஆதி மூலத்து - ஆதி மூலமாகிய, அரும் பொருளே - அறிதற்கரிய பரவஸ்துவே; கண்டீர் - அறியுங்கள்; (எ - று.) சமணர் - ஜைநர்; இவர்கள் - காரியகாரணரூபத்தால் இந்த உலகம் நித்யாநித்யமாயும் பிந்நாபிந்நமாயும் ஸத்யாஸத்யமாயுமிருக்கு மென்றும், ஆத்மாக்கள் இருவினைப்பயனால் வரும் தேகத்தின் பரிமாணங்களையுடையனவா மென்றும், மலதாரணம் அஹிம்ஸைமுதலிய செயல்களாலும் ஆத்ம ஜ்ஞாநத்தினாலும், இந்த ப்ரக்ருதியை விட்டு நீங்கி மேலுலகத்தை யடைகையே மோஷமென்றும் இவ்வாறாகத் தமக்குத் தோற்றியபடியே வேதவிருத்தங்களான விஷயங்களைத் தமது வாயில் வந்தபடியே பரக்கச்சொல்வார்கள். சமணர் - க்ஷபணர்; இவர்கள் - பௌத்தர்களை ஒருபுடை யொத்தலும் ஒவ்வாமையு முடையவர். சூனியவாதர் - சூனியமே தத்வமென்றிருக்கிற மாத்யமிகர்; இவர்கள் - ப்ரமாணமும் ப்ரமேயமும் (ப்ரமாணத்தினால் அறியப்படும் பொருளும்) ப்ரமாதாவும் (ப்ரமாணத்தையறிபவனும்) ஆகிய இவையுண்டென்றறிவது மதிமயக்கத்தின் செயலே யென்றும், ஸத்துமன்றாய் அஸத்துமன்றாய் ஸதஸத்துமன்றாய் ஸதஸத்விலக்ஷணமுமன்றாய் இந்நான்கு எல்லையையும் கடந்திருப்பதொன்றே தத்வமென்றும், சூந்யத்திலே சூந்யமென்று அறிகையே மோக்ஷமென்றும் பிதற்றுவார்கள். மறுபிறப்பும் இருவினைப்பயனுங் கடவுளும் இல்லையென்று வாதஞ்செய்வர். இவர்களும் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்களெனினும் இவர்களுடைய மதத்தின் கொடுமையைப்பற்றி இவர்களைத் தனியே பிரித்துக்கூறின ரென்க. இவ்வாறே "தர்க்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும்" என்று திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்திருத்தலுங் காண்க. பௌத்தர் - வைபாஷிகள் ஸௌத்ராந்திகள் யோகாசாரன் மாத்யமிகன் என நால்வகைப்படுவர்: இந்நால்வருள் மாத்யமிகனைச் சூனியவாதியென்று முற்கூறியதனால், "பூசற்பவுத்தர்" என்றது. மற்றை மூவரையுங் காட்டும். இவர்களுள், வைபாஷிகன் - பரமாணுத்திரளின் வடிவாய்க்கட்புலனாவதே உலகமென்றும், அவ்வுலகத்தைப்பற்றித் தோன்றும் உணர்வு க்ஷணிகமென்றும், உணர்வுக்குப் புலனாகும் பொருள்களெல்லாம் ஒரு நொடிப்பொழுதிற்குள்ளே தோற்றக்கேடுகளைப் பெறுமென்றும், எல்லாம் க்ஷணிகமென்று உண்டாகின்ற விஜ்ஞாநத்தின் தொடர்ச்சியே ஆத்மாவென்றும், இதில் நிலையானதென்ற எண்ணமே ஸம்ஸாரம் நிலையிலதென்ற எண்ணமே மோஷ மென்றுங் கூறுபவன்; ஸௌத்ராந்திகன் - பொருள்கள் யாவும் உணர்விலே தங்களுடைய வடிவைப் படைத்துத் தாங்கள் உடனே நசித்துவிட அவ்வுணர்வினாலுண்டான ஆகாரத்தினாலேயே அவ்வப்பொருள்கள் அநுமாநிக்கப்படுகின்றன வென்றும், ஆகவே பொருள்களின் பன்மையே பலவகை ஞானங்கள் தோன்றுவதற்குக் காரணமென்றும், அநுமாநத்தினால் உலகம் சித்திக்குமென்றும், அவ்வுலகத்தைக் குறித்த ஞானமும் க்ஷணிகம், அந்த க்ஷணிகவிஜ்ஞாநமே ஆத்மா, இதில் ஸ்திர |