மென்ற புத்தியே ஸம்ஸாரம், அஸ்திரமென்ற புத்தியே மோக்ஷமென்றுங் கூறுபவன், யோகாசாரன் - ஞானமென்ற ஒன்றேயுள்ளது என்றும், அந்த ஞானமே பலவடிவங்களைப் பெற்றுப் பலபண்டங்கள் போலத் தோன்றுகின்றதென்றும், அந்த ஞானம் க்ஷணிகமென்று அறிகையே மோக்ஷமென்றுஞ் சொல்லுபவன். சைவர் - தன்னை ஈஸ்வரனென்று மயங்கி உலகமெல்லாம் வணங்கவேண்டுமென்று விரும்பி அதற்குத்தகப் பகவானுடைய கட்டளையைப்பெற்று மோகசாஸ்திரங்களைப் பிரசாரஞ்செய்த ருத்ரனுடைய ஆகமத்தையே முக்கியமாகக் கொண்ட பாசுபதர். "ஒன்றுந்தேவு முலகு முயிரும் மற்றும் யாதுமில்லா, வன்று நான்முக ன்றன்னொடு தேவருலகோ டுயிர் படைத்தான்" "இலிங்கத்திட்ட புராணத்தீருஞ் சமணருஞ் சாக்கியரும், மலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந் தெய்வமுமாகி நின்றான், மலிந்துசெந்நெற்கவரிவீசுந் திருக்குருகூரதனுள், பொலிந்துநின்றபிரான் கண்டீ ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே" என்றார் நம்மாழ்வாரும். நீசத்துவம் - வேதத்துக்குப் புறம்பாயிருத்தலும், காணப்படும் பொருள்களெல்லாங் கணிகமென்பதும் முதலாயின. பௌத்தர் - புத்தனைத் தெய்வமாகக் கொண்டவர்; சைவர் - சிவனைத் தெய்வமாகக்கொண்டவர்; தத்திதாந்த வடமொழிகள். "மன்னுயிர்" என்றாற்போல, "நாசப்படாவுயிர்" என்றார். ஆதிமூலம் - முதற்பொருள்களுக்கெல்லாம் முதற்பொருள். இது, நேரசைமுதலாக வந்த கட்டளைக்கலித்துறை. (94) | அரும்புண்ட ரீகத் தடியிணைக்கென் னெஞ்ச | | மிரும்புண்ட நீராவ தென்றோ - விரும்பி | | யறந்திருந்துங் கோயி லரங்கா வுனைநான் | | மறந்திருந்து மேற்பிறவா மல். | (இ - ள்.) விரும்பி அறம் திருந்தும் கோயில் அரங்கா - எல்லாத்தருமங்களுந் திருத்தமாகச்செய்யப்படுகின்ற திருவரங்கம் பெரியகோயிலில் திருவுள்ளமுகந்து எழுந்தருளியிருப்பவனே! - உனை - உன்னை, நான் -, மறந்திருந்தும் - மறந்திருந்தாலும், மேல் பிறவாமல் - இனிப் பிறவியெடாதபடி, அரும் புண்டரீகத்து அடி இணைக்கு - பெறுதற்கரிய தாமரைமலர் போன்ற (உன்னுடைய) உபய திருவடிகளுக்கு, என் நெஞ்சம் - எனதுமனம், இரும்பு உண்ட நீராவது - (பழுக்கக்காய்ச்சிய) இரும்பு உட்கொண்ட நீர் போல மீண்டுவாராமல் லயமடைவது, என்றோ - எந்நாளோ? (எ - று.) இனிப் பிறவியுண்டாகாதவாறு, பழுக்கக்காய்ந்த இரும்பில் நீர் சென்று லயிப்பதுபோல என்நெஞ்சம் உனது திருவடித்தாமரைகளில் லயிப்பது எந்நாளோ? என்று எம்பெருமானது திருவடிகளில் தமதுமனம் பதியுங்காலத்தை வேண்டுகின்றனரென்க. பழுக்கக்காய்ச்சிய இரும்பில் நீரைவார்த்தால் அந்நீர் அவ்விரும்பிற்சென்று வயப்பட்டு மீண்டும் வெளிப்படாது; இது மீளாமைக்கு உவமை கூறப்படுதலை, "இரும்புண்டநீர் மீன்கினு மென்னு |