ழையிற், கரும்புண்டசொன்மீள்கிலன்காணுதியால்" என்ற கம்பராமாயணச் செய்யுளிலுங் காண்க. "நெடுவேங்கடத்தா, னீர விரும்புண்டரீகப்பொற் பாதங்க ளென்னுயிரைத், தீர விரும்புண்ட நீராக்குமா றுள்ளஞ் சேர்ந்தனவே" என்பர் திருவேங்கடத்தந்தாதியிலும். "தீர விரும்புண்ட நீரது போல வென்னாருயிரை யாரப்பருக வெனக் காராவமு தானாயே," "இரும்பனன்றுண்டநீர்போ லெம்பெருமானுக்கு என்ற, னரும்பெறலன்பு புக்கிட்டடிமைபூண்டுய்ந்துபோனேன்" என்பன பெரியோர்பாசுரங்கள். நாளென்னும்வாய்பாட்டால் முடிந்த இருவிகற்பநேரிசைவெண்பா. (95) | பிறவியெனுங் கடலழுந்திப் பிணிபசியோ டிந்திரியச் | | சுறவநுங்கக் கொடுவினையின் சுழலகப்பட்டுழல்வேனோ | | வறமுடையா யென்னப்பா வரங்காவென் னாருயிருக் | | குறவுடையா யடியேனை யுயக்கொள்வ தொருநாளே. | (இ - ள்.) அறம் உடையாய் - எல்லாத் தருமங்களையு முடையவனே! என் அப்பா - எனது சுவாமியே! அரங்கா -! என் ஆருயிருக்கு - எனது அரிய ஆத்துமாவுக்கு, உறவு உடையாய் - உறவினனானவனே! - பிறவி எனும் கடல் - பிறப்பென்கிற பெரிய கடலில், அழுந்தி - மூழ்கி, பிணி பசியோடு இந்திரியம் - நோயும் பசியும் பஞ்சேந்திரியங்களுமாகிய, சுறவம் - சுறாமீன்கள், நுங்க - விழுங்கும்படி, கொடு வினையின் சுழல் - கொடிய இருவினைகளாகிய நீர்ச்சுழியில், அகப்பட்டு - உட்பட்டுச் சிக்கிக்கொண்டு, உழல்வேனோ - சுழலக்கடவேனோ? அடியேனை -, உய கொள்வது - உஜ்ஜீவிக்கும்படி ஆட்கொள்வதாகிய, ஒரு நாளே - ஒருதினமும் (உளதாகுமோ) ? (எ - று.) கரைகாணவொண்ணாதிருத்தலால் பிறவியைக் கடலாகவும், கடலில் வீழ்ந்தவரைச் சுறாமீன்கள் கொத்தித் தின்பதுபோலப் பிணி பசி முதலியவை பிறவியிலுழல்கின்ற ஆத்மாவை வருத்துதலால் அப்பிணி பசி முதலிய வற்றைச் சுறாமீன்களாகவும், சுழலிலகப்பட்டவர் அச்சுழலினின்று தப்புதலரிதாவதுபோல இருவினையி லகப்பட்டவன் அதனினின்று மீளுத லரிதாதலால் இருவினைகளைச் சுழலாகவும் உருவகஞ்செய்தனர்; உருவகவணி. இதனால், திருமாலாகிய தோணியொன்றே, பிறவிக்கடலினின்று மீண்டு கரையேறுதற்கு ஏற்ற உபாயமா மென்றவாறு. "ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் - விஷ்ணு போதம்விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்," "துன்பக்கடல் புக்கு வைகுந்தனென்பதோர் தோணி பெறா துழல்கின்றான்" என்பன காண்க. "சென்மந் தரங்கங் கருமஞ் சுழிபிணி சேலினங்கு, சென் மந்த ரங்கதிர் பொன்கோள்கண் மாரி திண்கூற்றசனி, சென்மந்த ரங்கவற்றுள் விழுவோர் கரைசேர்க்கும் வங்கஞ், சென்மந் தரங் கவின் றோளா ரரங்கர் திருப்பதமே" என்பர் திருவரங்கத்தந்தாதியிலும். "ஒன்று சொல்லி யொருத்தனில் நிற்கிலாத லோரைவர்வன்கயவரை, யென்று யான் வெல்கிற்ப னுன் றிருவருளில்லையேல்" என்றார் நம்மாழ்வார். இது, எல்லாச்சீரும் காய்ச்சீர்களாகிய கொச்சகக்கலிப்பா. (96) |