லுள்ளாராலும் விரும்பி வந்து சேவிக்கப்படுதலால்), ஒள் கமலம் மேல் உற லால் - பிரகாசமான தாமரைமலரின்மேல் தோன்றியதனால் (சிறந்த புண்ணிய தீர்த்தங்கள் தன்மேல் தங்கப்பெறுதலால்), வேதா ஆம் - பிரமனைப் போன்ற, வேங்கடமே - ,- சால் உறையும் மண் மயம் கம் - பாத்திரத்திற் பொருந்திய மண்ணோடுகலந்த நீரை, தேற்று வித்தால் மாற்றுதல் போல் - தேற்றாங்கொட்டையைக் கொண்டு அத்தன்மையை மாற்றித் தெளியச்செய்தல் போல, ஆரியனால் - ஆசாரியனைக்கொண்டு, உள் மயக்கம் தேற்றுவித்தான் - (எனது) மனத்தின் தடுமாற்றத்தைத் தெளியச்செய்தவ னான திருமாலினது, ஊர் - வாசஸ்தாநமாம்; (எ - று.) முன்னிரண்டடி - பிரமனுக்கும் வேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலே டைபற்றிவந்த உவமையணி. (செம்மொழிச் சிலேடையாவது - சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்படாமல் பலபொருள்படுவது.) நாற்புறமும் நோக்கிய நான்கு முகமுடையவனாய்த் திசைமுகனென்றும் நான்முகனென்றும் பெயர்பெறுதலும் திருமாலினது திருநாபித் தாமரைமலரினின்று தோன்றியமையும் பிரமனுக்கும், எத்திசையிலுள்ளோராலும் தொழுது ஏத்தியிறைஞ்சப்படுதலும் அநேக புண்ணியதீர்த்தங்களை யுடைமையும் திருவேங்கடத்துக்கும் அமையும். சால் - நீர்கொள்ளும் மட்பாத்திரம். தேற்றாமரத்தின் விதையைத் தேய்த்து அத்தேய்வையை நன்றாகக்குழம்பிய நீரிற் கரைத்தால் அந்நீர் கலக்கந்தெளிதல், இயல்பு. ஞானம் அநுட்டானம் இவை நன்றாகவேயுடையனான நல்லாசிரியன் நேர்ந்து தத்துவஞானோ பதேசஞ்செய்து மனத்தைத் தெளிவித்தல் எம்பெருமானது திருவருளின் வாய்ப்பினா லன்றி அமையா தாதலின், அதனை அப்பெருமான்மேல் ஏற்றி, "மண்கலந்தநீரைத்தேற்றாங்கொட்டையைக்கொண்டு தெளிவித்தாற்போல, மயங்கிய மனத்தை ஆசிரியனைக்கொண்டு தெளிவித்தவன்" என்றார்; உயிர்கட்கு ஆவனசெய்தல் இறைவனது செய லென்க. குழம்பிய நீர் - கலங்கிய மனத்துக்கும், தேற்றாம்வித்து - ஆசிரியனுக்கும் உவமையாம். ம்ருண்மயம் என்ற வடசொல், மண்மயம் என விகாரப்பட்டது. கம், ஆர்யன் - வடசொற்கள். தேற்றுவித்தால், ஆரியனால் என்றவற்றில் - "ஆல்" உருபு - கருவிப்பொருளது. (4) | 5. | பாணிபிறை கொன்றை பணிசூடி மானேந்தி | | வேணியர னைப்பொருவும் வேங்கடமே - யாணிநிறப் | | பீதாம் பரனார் பிரமர்வா ழண்டங்கண் | | மீதாம் பரனார் விரும்பு. | (இ - ள்.) பாணி - நீரையும், பிறை - சந்திரனையும், கொன்றை - கொன்றையையும், பணி - பாம்பையும், சூடி - மேற்கொள்ளுதலாலும், மான் ஏந்தி - மானைத் தரித்தலாலும், வேணி அரனை பொருவும் - சடை முடியையுடைய சிவபிரானைப் போல்கின்ற, வேங்கடமே -, - ஆணி நிறம் பீதஅம்பரனார் - ஆணிப்பொன்னிறமுள்ள பீதாம்பரமென்னும் பொற் பட்டாடையை யுடுத்தவரும், பிரமர் வாழ் அண்டங்கள் மீது ஆம் பரனார் - |