பிரமதேவர் வாழ்கின்ற அண்டங்களுக்கு மேலாகிய பரமபதத்தில் எழுந் தருளியிருக்கிறவரும் ஆகிய திருமால், விருப்பு - திருவுள்ளமுவந்து வந்து எழுந்தருளித் தங்கியிருக்குமிடம்; (எ - று.) சிவபிரானுக்கும் திருவேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலேடையுவமை. சிவபிரான் பகீரதனது வேண்டுகோளினால் கங்கையை முடிமீதுகொண்ட மையும், தக்ஷமுனிவனது சாபத்தினால் க்ஷயமடைபவனாய்க் கலைகுறைந்து வந்து சரணமடைந்த சந்திரனை முடியின்மீது கொண்டு வரமளித்துப் பாது காத்தமையும், கொன்றைமலரை அன்போடு சூடிக்கொள்ளுதலும், தாருகவன முனிவர்களாலேவப்பட்டுத் தன்னைக்கொல்லவந்த நாகங்களையும் மானையும் வலியடக்கி நாகங்களை ஆபரணமாகக்கொண்டு மானை இடக்கையிலேந்தினமையும் காண்க. திருவேங்கடமலையும் திவ்வியதீர்த்தங்களும் கொன்றை மரங்களும் நாகங்களும் மான்களும் இருத்தலும், மிகவுயர்ந்த அம்மலையின் முடியின்மேல் சந்திரன்வருதலும், இயல்பு. சிவபிரானுக்கு வேணியையுடையமை கூறியதற்கு ஏற்ப, வேங்கடத்துக்கு அடர்ந்தவனத்தொகுதியை யுடைமை கொள்க. ஆணிப்பொன் - மாற்றுக்குறைவற்ற பொன். பீதாம் பரமென்பது - பீத அம்பரம் எனப்பிரிந்து, பொன்னிறமான ஆடையெனப் பொருள்படும்; தீர்க்கசந்தி. அண்டங்கள் அநந்தமென்றும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரமன் உளனென்றும், அவ்வண்டங்களுக்கெல்லாம் மேலுள்ளதான பரமபதத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்றன னென்றும், அந்நிலை ஐந்துவகை நிலையுள் பரத்துவமெனப்படு மென்றும் அறிக. "ஆர்" என்னும் பலர்பால் விகுதி, இரண்டிடத்தும் உயர்வுப்பொருளில் வந்தது. பிரமர் - பொருட்பன்மை; உயர்வுப்பன்மையன்று. விருப்பு - முதனிலைதிரிந்த தொழிலாகுபெயர். (5) | 6. | மாலாய்ச் சசிதழுவி வச்சிரமேந் திப்புகர்மா | | மேலாய்ப் புரந்தரனாம் வேங்கடமே - நாலாய்க் | | கிளர்வாகு மந்தரத்தான் கேட்டமரர் வேட்டுத் | | தளர்வாகு மந்தரத்தான் சார்பு. | (இ - ள்.) மால் ஆய் - மால்என்னும் ஒரு பெயரைக் கொண்டு (பெரு மையையுடையதாய்), சசி தழுவி - இந்திராணியைக் கூடி (சந்திரன் தன் மீது பொருந்தப்பெற்று), வச்சிரம் ஏந்தி - வச்சிராயுதத்தைக் கைக்கொண்டு (வச்சிர ரத்தினக் கற்களைத் தன்மேலுடையதாய்), புகர் மா மேல் ஆய் - (உத்தம விலக்கணமாகிய) செம்புள்ளிகளையுடைய (ஐராவதமென்னும்) யானைமேல் ஏறுதலால் (செம்புள்ளிகளையுடையயானைகள் தன்மேல்தங்கப்பெறுதலால்), புரந்தரன் ஆம் - இந்திரனை யொத்த, வேங்கடமே - , - நால் ஆய் கிளர் - நான்காய் விளங்குகின்ற, வாகுமந்தரத்தான் - மந்தரமலைபோன்ற தோள்களை யுடையவனும், அமரர் - தேவர்கள், கேட்டு - (தனது சிறப்பைக்) கேள்வி யுற்று, வேட்டு - (தாம்தாம் சென்றுசேர) விரும்பி, தளர்வு ஆகும் - (தமக்கு அதுஎளிதிற்கிடைத்திடாமையால் தாம்) தளர்ச்சியடைதற்குக் காரணமான, |