பாதாளமென்று பெயர்சொல்லப்படுகிற இயல்பையுடைய உலகமாகிய அவ்விடத்தினின்று எடுத்தவருமான திருமாலினது, ஊர் - திருப்பதி; (எ - று.) பளிங்கு வட்டத்து நடுப்பிளப்பில் முளைத்தெழுந்த காந்தட்செடியின் சிவந்த மலருக்கு, வெள்ளித்தகழியில் ஏற்றிய விளக்கு உவமை கூறப்பட்டது; வடிவுவமை. வெள்ளிய - வெண்மையென்னும் பண்பினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம்; இ - சாரியை. வெள்ளி - வெண்ணிறமுடையது; இ - பெயர்விகுதி. அந்நிறமுடைமைபற்றியே, சுக்கிரனுக்கு வெள்ளி யென்று பெயர். விடர் - கற்பிளப்பு. காந்தள் - மலர்க்கு முதலாகுபெயர். "செங்காந்தள்" என்பதில், செம்மை - ஆகுபெயர்ப்பொருளுக்கு ஏற்ற அடைமொழி. வேதியன் - வேதம்வல்லவன். நாட்டம் - நாடுதற்குக் கருவியானது; அம் - கருவிப்பொருள்விகுதி; பகுதி இடையொற்று இரட்டியது, விரித்தல். மேதிநீ - வடசொல்; (திருமாலாற் கொல்லப்பட்ட மதுகைடபரது) மேதசினால் (உடற்கொழுப்பினால்) நனைந்தது. என்று காரணப்பொருள். தேசமென்னும் பொருள்தருகிற "நாடு" என்ற சொல், இலக்கணையால், லோகமென்றபொருளில் உபயோகிக்கப்பட்டது. வெள்ளியெனும் வேதியன் நாட்டங்கெடுத்தார் "மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில், தக்கதிதன்றென்று தானம்விலக்கிய, சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய, சக்கரக் கையன்ழுஎன்ற பெரியாழ்வார் திருமொழியையுங் காண்க. "ஓதிய நாட்டங்கு" என்று பாடமாயின், ஓதப்பட்ட அந்நாட்டினின்று என்று பொருள்கொள்க; அப்பொழுது, அதற்கு ஏற்ப மூன்றாமடியிலும் "வேதியநாட்டம்" என்று பாடங்கொள்ளவேண்டும்: அத்தொடரில் வேதியன் என்ற உயர்திணைப்பெயரின் ஈற்றுனகரம் வருமொழிப் புணர்ச்சியில் "சிலவிகாரமா முயர்திணை" என்றதனாற் கெட்ட தென்க. இனி, திரிபு யமகங்களிலே பொருள்நோக்கில் நகரவேறுபாடு காணப்படினும் அதனை அமைதியாகக் கொள்ளல் மரபு; அதற்குக்காரணம், வரிவடிவில் மிக்க வேறுபாடு இருப்பினும் ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமை. (43) | 44. | அல்லிமலர்க் காந்தளின்மே லாடுஞ் சுரும்பினங்கண் | | மெல்லியர்கள் கைக்கழங்காம் வேங்கடமே - மல்லினரைப் | | பண்டறைந்த வன்புடையார் பார்த்தனுக்குத் தத்துவநூல் | | விண்டறைந்த வன்புடையார் வெற்பு. | (இ - ள்.) அல்லி - அகவிதழ்கள் நிறைந்ததான, மலர் காந்தளின் மேல் - செங்காந்தள் மலரின்மேல், ஆடும் - அசைந்தசைந்து மொய்த்து எழுகின்ற, சுரும்பு இனங்கள் - வண்டுகளின் கூட்டங்கள், மெல்லியர்கள் கை கழங்கு ஆம் - மகளிர்களாற் கையிற்கொண்டு ஆடப்படுகின்ற கழற்காய் போன்றிருக்கப்பெற்ற, வேங்கடமே - , - பண்டு - முன்பு, மல்லினரை - மற்போர்வீரர்களை, அறைந்த - தாக்கியழித்த, வன்பு உடையார் - வலிமை கெடாதவரும், பார்த்தனுக்கு - அருச்சுனனுக்கு, தத்துவம் நூல் - தத்துவ |